Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 கோச்சாகறதுக்கெல்லாம் எதுக்குங்க சர்வதேச கிரிக்கெட் அனுபவம்... கேள்வி எழுப்பும் கவுதம் கம்பீர்

டெல்லி : டி20 போட்டிகளின் பேட்டிங் கோச்சாக செயல்படுவதற்கு சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாடி இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

இந்திய அணியில் டி20 வடிவத்திற்கு மட்டும் தனியாக பயிற்சியாளர் இருக்க வேண்டியது அவசியம் என்றும் கம்பீர் குறிப்பிட்டுள்ளார்.

சிறந்த கோச்சாக இருப்பதற்கு சிறந்த கிரிக்கெட் வீரராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஆனால் சிறந்த தேர்வாளராக இருப்பதற்கு சிறந்த வீரராக இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனி கோச்சை நியமிக்க கோரிக்கை

தனி கோச்சை நியமிக்க கோரிக்கை

இந்திய அணியில் கிரிக்கெட்டின் குறுகிய வடிவமான டி20 போட்டிகளுக்கு பயிற்சி அளிக்க தனியாக ஒரு பயிற்சியாளரை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் வீரரும் நாடாளுமன்ற எம்பியுமான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்சின் கிரிக்கெட் கனெக்டட் ஷோவிற்காக பேசிய அவர், இவ்வாறு கூறியுள்ளார்.

லேசாக வைக்க கோச் உதவுகிறார்

லேசாக வைக்க கோச் உதவுகிறார்

சர்வதேச போட்டிகளை சிறப்பாக விளையாடுபவர்கள் மற்றும் அதிகமான கிரிக்கெட் போட்டிகளை விளையாடியவர்கள் மட்டுமே சிறந்த கோச்சாக திகழ முடியும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். டி20 வடிவ கிரிக்கெட்டில் பயிற்சியாளர்கள் வீரர்களின் மனநிலையை லேசாக வைத்துக் கொள்ளவும் மற்றும், சிறந்த பந்துகளை அடிக்கும்வகையில் அவர்களது மனநிலையை மாற்றவும் மட்டுமே செய்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மனதை சிறப்பாக்கவே பயிற்சி

மனதை சிறப்பாக்கவே பயிற்சி

மாறாக டி20 வடிவ கிரிக்கெட்டில் பந்துகளை எவ்வாறு எதிர்கொண்டு ஆடுவது என்பது குறித்து அதன் பயிற்சியாளர் எந்தவிதமான பயிற்சியும் வீரர்களுக்கு அளிப்பதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அவ்வாறு பயிற்சி அளிக்கப்பட்டால், அந்த கோச், அந்த வீரரை சிறப்பாக மாற்றுவதற்கு பதிலாக மிகவும் துன்புறுத்துகிறார் என்றே அர்த்தம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்வாளருக்கு அனுபவம் தேவை

தேர்வாளருக்கு அனுபவம் தேவை

தொடர்ந்து பேசிய கம்பீர், சிறந்த பயிற்சியாளராக இருப்பதற்கு சர்வதேச போட்டிகளில் அனுபவம் இருக்க வேண்டியது அவசியம் இல்லை என்றும் ஆனால் சிறந்த தேர்வாளராக செயல்படுவதற்கு அதிகமான போட்டிகளில் விளையாடி அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளார்.

Story first published: Thursday, May 21, 2020, 0:46 [IST]
Other articles published on May 21, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+