For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பெரிய சூழ்ச்சி.. வரிந்து கட்டிக்கொண்டு வரும் ஜாம்பவான்கள்..இந்திய அணிக்கு எதிராக இப்படி ஒரு திட்டமா

டெல்லி: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் ஆதிக்கத்தை காலி செய்ய வேண்டும் என்பதற்காக பல முன்னாள் வீரர்கள் முயன்று வருகிறார்கள்.

சர்வதேச கிரிக்கெட் உலகில் 90களிலும், 2000 ஆண்டுகளிலும் ஆஸ்திரேலிய அணிதான் ஆதிக்கம் செலுத்தியது. மிக முக்கியமான அணியாக சர்வதேச அளவில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தியது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் இடத்தை தற்போது இந்தியா பிடித்துள்ளது. சர்வதேச அளவில் அனைத்து விதமான கிரிக்கெட் ஆட்டங்களிலும் இந்தியாதான் கோலோச்சுகிறது.

தோனி

தோனி

இந்திய அணியின் கம்பீர் வளர்த்துவிட, அதை தோனி முன்னேற்ற, தற்போது கோலி புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளார். கோலிக்கு கீழ் இந்திய அணியில் அறிமுகமான வீரர்கள் எல்லோரும் உலகத்தரமான வீரர்களாக உள்ளனர். டெஸ்ட், ஒருநாள், டி 20 என்று அனைத்திலும் கோலியின் கேப்டன்சியின் கீழ் இந்திய அணி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

எப்படி

எப்படி

இந்த நிலையில் தற்போது இந்திய அணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சில முன்னாள் வெளிநாட்டு வீரர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள். மைக்கல் வாகன் தொடங்கி ஷேன் வார்னே வரை முன்னாள் வீரர்கள் இந்திய அணியில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். முக்கியமாக கேப்டனை மாற்ற வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.

 டெஸ்ட்

டெஸ்ட்

இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக ரஹானேவை நியமிக்க வேண்டும். டி 20 அணிக்கு கோலியை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. முன்னாள் வெளிநாட்டு வீரர்கள் இந்த கோரிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்கள்.

அணி தேர்வு

அணி தேர்வு

அதேபோல் அணியில் இவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்,அவருக்கு கொடுக்க வேண்டும் என்றும் விமர்சனங்கள் வைத்து இந்திய அணியின் தேர்வில் ஆதிக்கம் செலுத்த தொடங்கி உள்ளனர். இது இந்திய அணியின் ஆதிக்கத்தை காலி செய்யும் சூழ்ச்சி என்று பிசிசிஐ நிர்வாகிகள் கூறி வருகிறார்கள்.

ஆதிக்கம் காலி

ஆதிக்கம் காலி

பிசிசிஐ நிர்வாகி ஒருவரின் கூற்றுப்படி, கோலியை கேப்டன்சியில் இருந்து நீக்க பலர் திட்டமிடுகிறார்கள். இப்படி செய்தால் இந்திய அணியின் ஆதிக்கத்தை காலி செய்யலாம் என்று நினைக்கிறார்கள். கோலி கேப்டன்சி போனால் அணியின் சமநிலை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. இதுதான் அவர்களின் குறிக்கோள்.

முடியாது

முடியாது

ஆனால் பிசிசிஐ அப்படி ஒரு முடிவை எடுக்காது. இன்னும் பல வருடங்களுக்கு கோலிதான் கேப்டன். இதில் மாற்றமில்லை. பிசிசிஐ எடுக்கும் முடிவில் வெளிநாட்டு வீரர்கள் கருத்து சொல்ல முடியாது. வெளிப்புற அழுத்தங்களுக்கு நாங்கள் இடம்கொடுக்க மாட்டோம், என்று கூறியுள்ளனர்.

Story first published: Monday, February 1, 2021, 16:16 [IST]
Other articles published on Feb 1, 2021
English summary
External forces are trying to sabatoge Team India rhythm by talking against Team India.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+