கொஞ்சம் அதிகமா பயிற்சி செய்ங்க... இந்திய அணிக்கு அறிவுரை சொன்ன முன்னாள் ஆஸி. கேப்டன்!
சிட்னி : இந்திய அணி சிறிது அதிகளவிலான பயிற்சியை மேற்கொள்வது அந்த அணிக்கு ஆஸ்திரேலிய தொடரில் உதவும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இயான் சாப்பல் அறிவுறுத்தியுள்ளார்.
விராட் கோலி டெஸ்ட் தொடரின் இடையில் நாடு திரும்பவுள்ளதால் ஒரு பெரிய வெற்றிடம் நிலவும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் விராட் கோலி இல்லாத அணியில் இளம் வீரர்கள் அவர்களுடைய திறமையை வெளிக்காட்ட மிகச்சிறந்த வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குவாரன்டைனில் இந்திய வீரர்கள்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 3 ஒருநாள் போட்டித் தொடர், 3 டி20 போட்டித் தொடர் மற்றும் ஒரு பகலிரவு போட்டி உள்ளிட்ட 4 டெஸ்ட் போட்டித் தொடர்கள் வரும் 27ம் தேதி துவங்கி நடைபெறவுள்ளன. இதையொட்டி இந்திய அணயினர் தற்போது சிட்னியில் குவாரன்டைனில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய அணிக்கு சாப்பல் அறிவுரை
இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இந்திய அணி வீரர்கள் சிறிது அதிகளவிலான பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் அவர்கள் சிறப்பாக செயல்பட முடியும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இயான் சாப்பல் தெரிவித்துள்ளார். இஎஸ்பிஎன்னின் கிரிக்இன்போவிற்காக பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

வெற்றிடம் ஏற்படும்
முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ள கேப்டன் விராட் கோலி, தன்னுடைய குழந்தை பிறப்பையொட்டி அடுத்த 3 போட்டிகளில் பங்கேற்காமல் நாடு திரும்பவுள்ளார். இதையடுத்து இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்படும் என்றும் சாப்பல் கூறியுள்ளார்.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்
இந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில் இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த இதை சிறப்பான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று கூறியுள்ள சாப்பல், அணியின் பேட்டிங் ஆர்டரை தேர்வாளர்கள் சிறப்பாக அமைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications