For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முகமது ஷமி - சானியா மிர்சா திருமணம்? நம்பவே முடியாத புகைப்படம்.. உண்மையை உடைத்த சானியாவின் தந்தை

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மற்றும் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா திருமணம் செய்து கொண்டதாக சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களாக செய்திகள் வலம் வருகின்றன. அது குறித்த ஒரு புகைப்படமும் பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அது குறித்து சானியா மிர்சாவின் தந்தை விளக்கம் அளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, அவரது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவரது மனைவி அவர் மீது ஆதாரமற்ற பல்வேறு புகார்கள் தெரிவித்ததுடன், வழக்குகளும் பதிவு செய்துள்ளார். அதனால் அவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். தற்சமயம் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

T20 World Cup Indian national cricket team Cricket

அதேபோல கடந்த சில மாதங்கள் முன்பு சானியா மிர்சா தனது கணவர் சோயப் மாலிக்கை விவாகரத்து செய்தார். சோயப் மாலிக் மூன்றாவது திருமணம் செய்ய முடிவு செய்ததை அடுத்து சானியா அந்த முடிவை எடுத்தார். பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத்தை சோயப் மாலிக் மூன்றாவதாக திருமணம் செய்தார். இதை அடுத்து சோயப் மாலிக் - சானியா மிர்சா பிரிந்து விட்டனர்.

அப்போதே முகமது ஷமி, சானியா மிர்சாவை திருமணம் செய்து கொள்வார் என வதந்திகள் பரப்பப்பட்டன. இந்த நிலையில் கடந்த ஜூன் 12-ம் தேதி சானியா மிர்சா மற்றும் முகமது ஷமி திருமண கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டன. அதனால் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக எண்ணி பலரும் அந்த செய்தியை பரப்பி வந்தனர்.

இந்த நிலையில் அது சோயப் மாலிக் மற்றும் சானியா மிர்சாவின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என தெரிய வந்துள்ளது. அந்த புகைப்படத்தில் சோயப் மாலிக்கின் முகத்தை எடுத்து விட்டு, ஷமியின் முகத்தை மாற்றி வைத்திருப்பதாக தெரிய வந்துள்ளது. சில விஷமிகள் இவ்வாறு புகைப்படத்தை உருவாக்கி வதந்தியை பரப்பி உள்ளனர்.

இந்த வதந்தி குறித்து பேசிய சானியா மிர்சாவின் தந்தை, "இந்த வதந்திகள் சுத்த முட்டாள்தனமானது. சானியா மிர்சா இது வரை முகமது ஷமியை நேரில் பார்த்ததே இல்லை" எனக் கூறினார். தற்போது சானியா மிர்சா மெக்காவுக்கு புனித யாத்திரை சென்றுள்ளார். அவர் தனது கணவரை பிரிந்த நிலையில் தனது மகனுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். முகமது ஷமி இந்திய அணியில் மீண்டும் இடம் பெறும் முயற்சியில், தனது காயத்திலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறார். அவர் அடுத்து வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க வேண்டி தன் உடற்தகுதியை தயார் செய்து வருகிறார்.

Story first published: Friday, June 21, 2024, 21:38 [IST]
Other articles published on Jun 21, 2024
English summary
Fact Check: Did Mohammed Shami marry Sania Mirza? Here is the truth
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+