டேவிட் வார்னர் ஒரு அடாவடிக்காரர்.. அவருக்கு எல்லாம் நேரம் தர மாட்டேன்.. டுபிளஸிஸ் கடும் தாக்கு
லண்டன் : ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஒரு அடாவடிக்காரர் என்று தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டூப்ளசிஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Faf - Through fire என்ற புத்தகத்தை தென்னாப்பிரிக்கா வீரர் டுப்ளசிஸ் எழுதி இருக்கிறார்.
இந்த புத்தகம் குறித்து பேட்டி ஒன்றில் பேசும் போது டுப்ளசிஸ் கடுமையான விமர்சனத்தை வார்னர் மீது வைத்திருக்கிறார்.

அதாவது 2018 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது கிரிக்கெட் உலகிலே பெரிய சர்ச்சை ஒன்று உருவானது. அந்தத் தொடரில் கேப் டவுனில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை sandpaper ஐ வைத்து சேதப்படுத்தினர்.
இதன் வீடியோ வெளியான நிலையில், டேவிட் வார்னர் ஸ்மித் உள்ளிட்ட மூன்று பேருக்கு ஒரு ஆண்டு கிரிக்கெட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை தனது புத்தகத்தில் டூப்ளசிஸ் குறிப்பிட்டுள்ளார் .இது தொடர்பான கேள்வி குறித்து பதிலளித்த அவர் ஆஸ்திரேலியா வீரர்கள் அடாவடித்தனமாக எங்களை மிரட்டும் வகையில் நடந்து கொண்டனர்.
எங்களை தகாத வார்த்தை பயன்படுத்தி போட்டி முழுவதும் எங்களை திட்டினர். இப்படி நடைபெறும் போது நமக்காக நாம்தான் நின்று போராட வேண்டும். வார்னர் பற்றி நல்லவிதமாக சொல்ல ஒன்று கூட இல்லை. அவர் ஒரு அடாவடிக்காரர். அவரைப் பற்றி எல்லாம் பேசி என் நேரத்தை நான் செலவழிக்க விரும்பவில்லை என்று பேட்டியில் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications