கோலியை உசுப்பேத்தாம உம்முன்னு இருங்க! அப்ப தான் கம்முன்னு இருப்பார்! ஆஸி.வை எச்சரித்த முன்னணி வீரர்
மெல்போர்ன் : விராட் கோலியை உசுப்பேத்தாமல் உம்முன்னு இருக்குமாறு ஆஸ்திரேலிய அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் தென்னாபிரிக்க அணியின் கேப்டன் ஃபாப் டு பிளேசிஸ்.
இந்திய அணியின் கேப்டனும், உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனும் ஆன விராட் கோலி களத்தில் ஆக்ரோஷமாக செயல்படுவார்.
அவரை கோபப்படுத்தி விட்டால் அது நமக்கு தான் நஷ்டம் என ஆஸ்திரேலிய அணியை எச்சரித்துள்ளார் பிளேசிஸ்.

தனியாளாக ரன் குவிக்கும் கோலி
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கே நீண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்திய அணியில் விராட் கோலி தான் முக்கிய வீரராக இருக்கிறார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பினாலும், தனியாளாக இருந்து ரன் குவிக்கிறார் கோலி.

வம்பிழுப்பதை விரும்பும் வீரர்கள்
அவரை எப்படி சமாளிப்பது என தென்னாபிரிக்க கேப்டன் ஃபாப் டு பிளேசிஸ் ஆஸ்திரேலிய அணிக்கு யோசனை தெரிவித்தார். "விராட் கோலி போன்ற வம்பிழுப்பதை விரும்பும் சில வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இருக்கிறார்கள். அவர் சண்டைக்குள் செல்ல விரும்புவார்" என்றார்.

கோலி போன்ற வீரர்கள்
மேலும், "அது போன்ற வீரர்கள் ஒவ்வொரு அணியிலும் இருப்பார்கள். நாங்கள் அணியாக ஒவ்வொரு தொடருக்கும் முன்பும் விவாதிப்போம். அது போன்ற வீரர்களிடம் எதுவும் கூறாமல் இருப்பது நல்லது என நினைப்போம்" என கூறினார்.

நாங்கள் அமைதி காத்தோம்
இந்தியா இந்த ஆண்டு துவக்கத்தில் தென்னாபிரிக்காவில் டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. அப்போது கோலியிடம் தென்னாபிரிக்க அணி அமைதி காத்தது, அதையும் மீறி அவர் அந்த தொடரில் சிறப்பாக ஆடினார் என ஃபாப் டு பிளேசிஸ் கூறினார். விராட் கோலி அந்த தொடரின் மூன்று போட்டிகளில் 283 ரன்கள் குவித்தார்.
அப்ப ஆஸ்திரேலியா கோலியை உசுப்பேத்தாம உம்முன்னு இருந்தா, கோலி கம்முன்னு இருப்பார்.. ஆஸ்திரேலியா ஜம்முன்னு ஜெயிச்சுடலாம்.. கேட்க நல்லாத்தான் இருக்கு.. என்ன நடக்குதுன்னு பார்ப்போம்.


Click it and Unblock the Notifications