Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. மீண்டும் திரும்புகிறார் டுபிளஸிஸ்.. வேற ஆச்சரியமும் இருக்கு

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக விளங்கிய டுபிளஸிஸ், கடந்த சீசனில் பெங்களூரு அணிக்காக விளையாடினார்.

இதனால் சென்னை அணி தோல்வியை தழுவியது. ரசிகர்களும் டுபிளஸிசை ரொம்பவே மிஸ் செய்தனர். இந்த நிலையில் தான் ஒரு குட் நியூஸ் கிடைத்துள்ளது.

சூப்பர் கிங்ஸ் அணிக்கு டுபிளஸிஸ் திரும்புகிறார். இது ஏறக்குறைய 99.99 சதவீதம் உறுதி. ஆனால் அதில் ஒரு டிவிஸ்ட் இருக்கிறது.

புதிய அணி

புதிய அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், சிஎஸ்கே அணி, தனது எல்லையை விரிவுப்படுத்துகிறது. ஆம், தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் புதிய டி20 தொடரை ஜோகனஸ்பர்க் தலைமையிலான அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வாங்கியுள்ளது. தற்போது அணிக்கு ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் என பெயர் வைக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

டுபிளஸிஸ்

டுபிளஸிஸ்

ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக டுபிளஸிஸ் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளார். தென்னாப்பிரிக்காவை சேர்ந்த அவர், அந்த லீக்கில் மிக முக்கியத்துவம் வாய்ந்த வீரர் ஆவார். மேலும் சிஎஸ்கே நிர்வாகத்துடன் நல்ல நட்பில் இருப்பதால், அவர் தான் ஜோகனஸ்பர்க் அணியின் கேப்டனாக இருப்பார் என்று அடித்து சொல்கிறார்கள் கிரிக்கெட் வல்லுனர்கள்.

ஒப்பந்தம் உறுதி

ஒப்பந்தம் உறுதி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, தென்னாப்பிரிக்காவில் எந்த டி20 அணியையும் வாங்கவில்லை. அதனால் சிஎஸ்கே டுபிளஸிசை ஒப்பந்தம் செய்வதில் எந்த தடங்கலும் இருக்காது. மேலும், டுபிளஸிஸ் ஓப்பந்தம் செய்யப்பட்டால், இதையே காரணமாக வைத்து, ஐபிஎல் தொடரிலும் டுபிளஸிசை டிரேட் செய்து விடலாம். ஆனால், அந்த அளவுக்கு ஆசைப்படுவது கொஞ்சம் தப்பு.

Recommended Video

Dhoni கொடுத்த Confidence! Deepak Chahar-ன் Motivational Speech | Cricket
வேறு யாருக்கு வாய்ப்பு?

வேறு யாருக்கு வாய்ப்பு?

இதே போன்று சிஎஸ்கே அணிக்காக விளையாடிய இம்ரான் தாஹிர், டுவைன் பிரிட்டோரியஸ், பிராவோ ஆகியோர் ஜோகனஸ்பர்க் அணிக்கும் விளையாட வாய்ப்பு உள்ளது. இதனிடையே, ஜோகனஸ்பர்க் அணியை தயார்படுத்தும் பணியை தோனி தான் மேற்கொள்வார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த அணிக்கும் பயிற்சியாளராக ஸ்டிபன் பிளமிங் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, August 11, 2022, 16:45 [IST]
Other articles published on Aug 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+