For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து கங்குலி விலகலா? திடீர் தகவலால் ரசிகர்கள் குழப்பம்.. என்ன நடக்கிறது?

மும்பை: பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சவுரவ் கங்குலி விலகியதாக தகவல் வெளியானதால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 39வது தலைவராக முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி செயல்பட்டு வருகிறார்.

கடந்த 2019ம் ஆண்டு பதவியேற்ற கங்குலிக்கு வரும் செப்டம்பர் மாதத்துடன் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது.

கங்குலி ராஜினாமா?

கங்குலி ராஜினாமா?

விராட் கோலியின் கேப்டன்சி சர்ச்சை, இந்திய அணித்தேர்வில் தலையிடுவது என சவுரவ் கங்குலி மீது பல்வேறு புகார்கள் அடுத்தடுத்து எழுந்தன. இந்நிலையில் சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிசிசிஐ பொதுச்செயலாளராக உள்ள ஜெய் ஷா புதிய தலைவராக பதவியேற்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் திடீர் குழப்பம்

ரசிகர்கள் திடீர் குழப்பம்

இந்த தகவலால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை என்பது உறுதியாகியுள்ளது. பிசிசிஐ-ன் பெயரில் போலியான கணக்கு ஒன்று ட்விட்டரில் உலா வருகிறது. அதில் தான் கங்குலியின் ராஜினாமா தகவல் பதிவிடப்பட்டுள்ளது. இதனை கண்ட ரசிகர்கள் அதனை நம்பி, குழப்பமடைந்துள்ளனர்.

கங்குலியின் வழக்கு

கங்குலியின் வழக்கு

இது ஒருபுறம் இருக்க, கங்குலி மற்றும் ஜெய் ஷா ஆகியோர் தங்களது பதவிக்காலத்தை நீட்டிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தற்போதுள்ள பிசிசிஐ விதிமுறைகள்படி பிசிசிஐ அல்லது மாநில வாரியங்களில் ஒருவரால் அதிகபட்சமாக 6 வருடங்கள் தான் பதவி வகிக்க முடியும். அதன்பின் கட்டாயமாக 3 ஆண்டுகளுக்கு எந்தவித பதவிக்கும் போட்டியிட முடியாது.

Recommended Video

India அணியின் Captain-ஆக KL Rahul பெயர் அறிவிப்பு | IND vs ZIM *Cricket
என்ன சிக்கல்

என்ன சிக்கல்

அதன்படி பார்த்தால், கங்குலி கடந்த 2014ம் ஆண்டு முதல் மேற்கு வங்க வாரியத்தின் தலைவராகவும், ஜெய் ஷா 2013ம் ஆண்டு முதல் குஜராத் வாரியத்தின் உறுப்பினராக இருந்தனர் என்பதால் மீண்டும் போட்டியிட முடியாது. இதன்பின்னர் தான் பிசிசிஐ-ல் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இவர்கள் இந்த விதிமுறையை மாற்றி அமைப்பதற்காக தான் வழக்கு தொடர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, August 11, 2022, 16:44 [IST]
Other articles published on Aug 11, 2022
English summary
BCCI president sourav ganguly ( பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ) பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சவுரவ் கங்குலி விலகியதாக வெளியான தகவலால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+