For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தமிழ் கிரிக்கெட் கமெண்டரியை நிறுத்திய பிரபல தொலைக்காட்சி..!! ரசிகர்கள் மகிழ்ச்சி

மும்பை: கிரிக்கெட் என்றாலே தொலைக்காட்சிகளில் வரும் கமெண்டரி தான் நமக்கு நியாபகத்திற்கு வரும்.

Recommended Video

Sony Sports Stopped Tamil Commentary; Ashes will be in English | OneIndia Tamil

ஒரு காலத்தில் ஆங்கிலத்தில் மட்டும் இருந்த கிரிக்கெட் வர்ணனை தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, என்று அனைத்து பிராந்திய மொழிகளிலும் கொண்டு வரப்பட்டது

இதன் மூலம் ஆங்கிலம் தெரியாதவர்கள், அவர்களது தாய் மொழியில் கிரிக்கெட்டை கேட்டும், பார்த்தும் வந்தனர்.

விமர்சனம்

விமர்சனம்

இந்த நிலையில், ஆங்கிலம் கமெண்டரியை தவிர மற்ற மொழி கமெண்டரிகள் மோசமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. கிரிக்கெட்டை தவிர மற்ற சொந்த கதை, சோக கதை எல்லாம் வர்ணனையாளர்கள் பேசி வருவதாக தொடர்ந்து விமர்சனங்கள் வந்தன. கிரிக்கெட்டுக்கு தொடர்பே இல்லாத ஆட்கள், கண்டதை பேசி வருவதாக கூறப்பட்டது.

ஆங்கிலம் வர்ணனை

ஆங்கிலம் வர்ணனை

கிரிக்கெட்டுக்கு தொடர்புடைய முன்னாள் வீரர்களின் பேச்சை கேட்பதற்கு பதில், தொலைக்காட்சியை மியூட் செய்துவிட்டு பார்க்கலாம் என்று ரசிகர்கள் விமர்சனம் செய்ய தொடங்கினர். இதனால் எதற்கு கிரிக்கெட் கமெண்டரி தொடங்கப்பட்டதோ, அதன் பயனை பெறவில்லை, இதனால் மக்களும் மீண்டும் ஆங்கிலம் கமெண்டரிக்கு செல்ல தொடங்கிவிட்டனர்

தமிழ் வர்ணனை நிறுத்தம்

தமிழ் வர்ணனை நிறுத்தம்

இதனால் தமிழ், ஹிந்தி, தெலுங்கு கமெண்டரிக்கு போதிய வரவேற்பு இல்லாததால் பிரபல தொலைக்காட்சியான சோனி நெட்வோர்க் அதனை நிறுத்திவிட்டது. ஆஷஸ் டெஸ்ட் தொடரின் எஞ்சிய போட்டிக்கு தமிழ், ஹிந்தி கிரிக்கெட் கமெண்டரி இல்லை என்றும் வெறும் ஆங்கிலத்தில் மட்டும் தான் கமெண்டரி ஒளிபரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஷஸ் தொடர்

ஆஷஸ் தொடர்

ஆஷஸ் தொடர் இதனிடையே ஆஷஸ் டெஸ்ட் தொடர் விடியற்காலையில் தொடங்குவதால், அதனை கிரிக்கெட் ரசிகர்களே பார்ப்பது இல்லை என்றும், அப்படி பார்ப்பவர்கள் ஆங்கிலத்தை மட்டுமே பார்க்க விரும்புவதால், மற்ற மொழி கமெண்டரி நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இந்தியா தொடருக்கு தமிழ் கமெண்டரி தொடரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Story first published: Tuesday, January 4, 2022, 17:14 [IST]
Other articles published on Jan 4, 2022
English summary
Famous cricket channel stopped tamil commentary தமிழ் கிரிக்கெட் கமெண்டரியை நிறுத்திய பிரபல தொலைக்காட்சி..!! ரசிகர்கள் மகிழ்ச்சி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+