கார் விபத்தில் சிக்கிய சஸ்பன்ஸ் நாயகன்.. கிரிக்கெட் அம்பயர் ரூடி கோர்ட்சன் உயிரிழப்பு.. என்ன நடந்தது

தென்னாப்பிரிக்கா: சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் புகழ்பெற்ற அம்பயரான ரூடி கோர்ட்சன் இன்று காலமானதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கிரிக்கெட் போட்டிகளில் ஸ்லோ மோஷன் ஸ்டைலில் கைகளை தூக்கி அம்பயரிங்
செய்வதன் மூலம் புகழ்பெற்றவர் ரூடி கோர்ட்சன்.

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இவர், இன்று திடீரென கார் விபத்தில் உயரிழந்துள்ளார். அவருக்கு வயது 72 ஆகும்.

யார் ரூடி கோர்ட்சன்

யார் ரூடி கோர்ட்சன்

கிரிக்கெட் போட்டிகளில் ஒரு அணி அவுட்டிற்கு முறையிடும் போது, உடனடியாக அதன் முடிவை அறிவிக்க மாட்டார் ரூடி. நீண்ட நேரம் வீரர்களுக்கு இடையே சஸ்பென்ஸ் கொடுத்துவிட்டு, மிகவும் மெதுவாக கைகளை தூக்கி முடிவை அறிவிப்பார். இவரின் இந்த ஸ்டைல், வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களையும் பரபரப்பின் உச்சத்திற்கே கொண்டு செல்லும். இதன் மூலமே இவர் உலக ரசிகர்களிடையே மிக பிரபலமடைந்தார்.

கார் விபத்து

கார் விபத்து

இந்நிலையில் இவர் உயிரிழந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். இன்று காலை தனது சொந்த ஊரில் உள்ள நெல்சன் மண்டேலா பே-க்கு கோல்ஃப் விளையாடுவதற்காக நண்பர்களுடன் சேர்ந்து சென்றுள்ளார். அங்கிருந்து திரும்பி வந்துக்கொண்டிருந்த போது, கார் விபத்துக்குள்ளானதில் ரூடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை அவரது மகன் உறுதி செய்துள்ளார்.

 மூடியின் அம்பயர் பயணம்

மூடியின் அம்பயர் பயணம்

கடந்த 1981ம் ஆண்டு முதல் தனது அம்பயரின் பணியை தொடங்கிய ரூடி கோர்ட்சன், 1992ம் ஆண்டு இந்தியா - தென்னாப்பிரிக்க அணிஅக்ல் மோதிய போட்டியில் தான் சர்வதேச பயணத்தை தொடங்கினார். 2010ம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்தார். இவர் மொத்தமாக 331 சர்வதேச போட்டிகளுக்கு அவர் அம்பயரிங் செய்துள்ளார்.

 அம்பயரிங் சாதனை

அம்பயரிங் சாதனை

உலகில் அதிக ஒருநாள் போட்டிகளுக்கு அம்பயரிங் செய்த 2வது நபர் இவரே ஆகும். 150 ஒருநாள் போட்டிகளுக்கு நடுவராக செயல்பட்டுள்ளார். இதே போல 200 டெஸ்ட் போட்டிகளையும் அம்பயரிங் செய்துள்ளார். இதன் மூலம் அதிக டெஸ்ட் போட்டிகளுக்கு அம்பயரிங் செய்தவர்கள் பட்டியலிலும் 2வது இடம் பிடித்துள்ளார்.

இப்படிபட்ட புகழ்பெற்ற அம்பயர் தான் இன்று உலகை விட்டு மறைந்துள்ளார். இவரின் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Cricket umpire Rudi Koertzen died (கிரிக்கெட் அம்பயர் ரூடி கோர்ட்சன் உயிரிழப்பு ) புகழ்பெற்ற கிரிக்கெட் அம்பயர் ரூடி கோர்ட்சன் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Story first published: Tuesday, August 9, 2022, 21:35 [IST]
Other articles published on Aug 9, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X