எங் குழந்தைக்கு அப்பாவா இருங்க..!! பிரபல கிரிக்கெட் வீரரிடம் லவ்வை சொன்ன கலக்கல் நடிகை
இஸ்லாமாபாத்: என்னோட குழந்தைகளுக்கு அப்பாவாக இருக்கணும், முடியுமா என்று பிரபல கிரிக்கெட் வீரரிடம் வித்தியாசமாக தமது காதலை சொல்லி இருக்கிறார் பாக். நடிகை ஷேகர் ஷின்வாரி.
கிரிக்கெட் வீரர்கள் மீது நடிகைகள் காதலில் விழுவது அடிக்கடி நடக்கும் விஷயம். பல தருணங்களில் வீரர்கள், நடிகைகள் இடையே கிசுகிசுக்கள் எழுவது வழக்கம். அப்படி ஒரு சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது. ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக..!
தற்போது பாகிஸ்தானை சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் நியூசிலாந்து கிரிக்கெட் வீரரிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்திள்ளார். அதுவும் ரொம்பவும் வித்தியாசமாக சொல்லியிருக்கிறார்.

குழந்தைகளுக்கு தந்தை
பாகிஸ்தான் நடிகை ஷேகர் ஷின்வாரி. நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஜிம்மி நீஷமிடம், நீங்கள் என்னுடைய வருங்கால குழந்தைகளுக்கு தந்தையாக இருக்க முடியுமா என்று வித்தியாசமான முறையில் தமது காதலை வெளிப்படுத்தி இருக்கிறார்.
டுவிட்டர் பதிவு
அதோடு 2 எமோஜிக்களை விளையாட்டாக பதிவிட்டுருந்தார். அவரது இந்த கலக்கலான நடவடிக்கை இணையத்தில் வைரலாகி இருக்கிறது. அதற்கு ஜிம்மி நீஷம் பதிலளித்துள்ளார். நீங்கள் அந்த எமோஜியை பதிவிட்டிருக்க தேவையில்லை என்று அவர் கூறியிருக்கிறார்.
வைரலான பதில்
இந்த சம்பவம், இணையத்தில் சரமாரியாக வைரலானது. இருவருக்கும் இருக்கும் உரையாடல்களை மையப்படுத்தி ஆளாளுக்கு பேச ஆரம்பித்து விட்டனர். இந்த சம்பவத்தை வைத்து பலரும் உங்களது விருப்பத்தை அவர் ஏற்கவில்லை என்று கூறிவந்தனர்.
நிராகரிக்கவில்லை
அதற்கு ஷேகர் ஷின்வாரி பதிலளித்துள்ளார். தமது பதிவில் அவர் கூறி இருப்பதாவது: என்னுடைய விருப்பத்தை நிராகரிக்கவில்லை, அப்படி அவர் நிராகரித்திருந்தால் அவர் எனக்கு பதிலளித்திருக்கமாட்டார். அவருக்கு விருப்பம் இருக்கிறது. அதனால் தான் பதிலளித்திருந்தார். எமோஜிக்கள் பதிவிட்டிருக்க வேண்டாம் என்று இப்போது தோன்றுகிறது என்றார்.


Click it and Unblock the Notifications