Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முடிஞ்சா பிடிச்சுப் பாரு.. ரசிகரை சுத்த விட்ட தோனி.. நடுவில் மாட்டிக் கொண்ட லஷ்மிபதி பாலாஜி!

Recommended Video

ரசிகரை சுத்த விட்ட தோனி.. நடுவில் மாட்டிக் கொண்ட லஷ்மிபதி பாலாஜி-வீடியோ

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

பயிற்சியின் இடையே தோனி ரசிகர் ஒருவர், அத்துமீறி உள்ளே நுழைந்தார். வழக்கம் போல தோனி அவருக்கு ஆட்டம் காட்ட, பார்த்தவர்களுக்கு ஒரே குஷியாக இருந்தது.

தீவிர பயிற்சி

தீவிர பயிற்சி

2019 ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 23 முதல் துவங்க உள்ளது. அதற்கான பயிற்சியில் சிஎஸ்கே அணி வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தோனி உட்பட அனைத்து வீரர்களும் தீவிர பயிற்சியில் இறங்கி உள்ளனர்.

முடிஞ்சா பிடி

முடிஞ்சா பிடி

அப்போது தோனியை சந்திக்க விரும்பிய ரசிகர் ஒருவர் பாதுகாவலர்களை மீறி உள்ளே நுழைந்தார். தோனி அருகே அவர் வந்ததும், "முடிஞ்சா பிடி பார்ப்போம்" என தோனி அவரை நெருங்க விடாமல் ஆட்டம் காட்டினார்.

மாட்டிக் கொண்ட பாலாஜி

மாட்டிக் கொண்ட பாலாஜி

இவர்கள் இடையே முன்னாள் வீரரும், சிஎஸ்கே பயிற்சியாளருமான லக்ஷ்மிபதி பாலாஜி மாட்டிக் கொண்டார். அவரை சுற்றி, சுற்றி தோனி ஓட, அந்த ரசிகரும் ஓடி வர, பயிற்சியை காண வந்த ரசிகர்கள் ஒரே குஷியானார்கள்.

வைரல் வீடியோ

அதன் பின் அந்த ரசிகரை பாதுகாவலர்கள் பிடித்துச் சென்றனர். அப்போது தோனி அவருடன் கை குலுக்கி அனுப்பி வைத்தார். சிஎஸ்கே ட்விட்டர் பக்கத்தில் இந்த சம்பவம் குறித்த வைரல் வீடியோ இடம் பெற்றுள்ளது.

ஆஸி. தொடரில் ரசிகர்

ஆஸி. தொடரில் ரசிகர்

சமீபத்தில், நடந்து முடிந்த ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரின் போதும், இதே போல ரசிகர் ஒருவர் அத்துமீறி தோனியை காண வந்தார். அப்போதும் தோனி ஓடிப் பிடித்து விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு இல்லை!

பாதுகாப்பு இல்லை!

எனினும், இது போல ரசிகர்கள் அத்துமீறுவது வீரர்களின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கி இருக்கிறது. மேலும், அப்படி எல்லை மீறி வரும் ரசிகர்களுக்கும் காவல்துறை வழக்கு போன்ற சிக்கல்கள் ஏற்படும்.

Story first published: Monday, March 18, 2019, 11:18 [IST]
Other articles published on Mar 18, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+