Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னதான் ரோகித் டபுள் செஞ்சுரி அடித்தாலும் ரசிகர்களுக்கு தல டோணிதான்.. ரசிகரின் செயலை பாருங்கள்

மொகாலி: பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி பல்வேறு காரணங்களால் மறக்க முடியாத போட்டியாகியுள்ளது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 392 ரன்களை குவித்து, மொகாலியில் அதிகப்படியான ரன்னை பதிவு செய்து அசத்தியது. 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி வாகை சூடியது.

இதில் கேப்டன் ரோகித் ஷர்மா இரட்டை சதம் விளாசி, சர்வதேச அரங்கில் 3 முறை இரட்டை சதங்களை கடந்து அசத்தல் சாதனை படைத்தார்.

ரோகித் ஷர்மா மனைவி ஆனந்த கண்ணீர்

ரோகித் ஷர்மா மனைவி ஆனந்த கண்ணீர்

ரோகித்ஷர்மா டபுள் செஞ்சுரி அடித்ததை பார்த்துவிட்டு அவரது மனைவி ஆனந்த கண்ணீர் விட்ட படமும், வீடியோவும், சோஷியல் மீடியா முழுக்க நேற்று வைரலானது. அதேபோல செஞ்சுரி, டபுள் செஞ்சுரி அடித்த ரோகித் ஷர்மா மனைவியை பார்த்து பிளையிங் கிஸ் கொடுத்ததும், பின்னர் பெவிலியன் திரும்பி மனைவிக்கு நெற்றியில் முத்தமிட்டு இந்த இரட்டை சதத்தை திருமண நாள் பரிசாக அறிவித்ததும் அதிகமாக செய்திகளில் இடம் பிடித்தது.

ஓட்டப்பந்தையத்தில் வெற்றி

ஓட்டப்பந்தையத்தில் வெற்றி

போட்டிக்கு முன்பாக ஹர்திக் பாண்டியாவுடன் 100 மீட்டர் தூரம் டோணி ஓட்டப்பந்தையம் நடத்தி வெற்றி கண்ட வீடியோவும் வைரலாக சுற்றியது. ஆனால் மற்றொரு பாசமிகு சம்பவமும் அதே மைதானத்தில் அரங்கேறியது.

டோணியை பார்த்து நெகிழ்ச்சி

டோணியை பார்த்து நெகிழ்ச்சி

ஆம்.. டோணியை பார்க்க உள்ளே ஓடி வந்த ரசிகர் ஒருவர் அவரின் கால்களை தொட்டு வணங்கினார். இருப்பினும் அதை டோணி தடுத்தார். ஓடி வந்த பாதுகாப்பு வீரர்கள் அந்த ரசிகரை அழைத்துச் சென்றனர். போகும்போதும் அந்த ரசிகர், திரும்பி திரும்பி டோணியையே அன்பு, உருக்கம் போன்ற பாவனைகளோடு திரும்பி, திரும்பி பார்த்து சென்றார்.

ஆயுள் பலன்

நமது நெட்டிசன்கள், இதை குணா படத்தில் கமல் ஹீரோயினை பார்த்து உருகும் முக பாவனையோடு ஒப்பிட்டு வைரலாக்கியுள்ளனர். இந்த போட்டோவை பாருங்கள் உங்களுக்கே தெரியும். இதை பார்த்ததும், பின்னணியில், "பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க" என்ற பாடல் வரிகள் இசையோடு உங்கள் மனதை தாலாட்டினால் அதற்கு நாங்கள் பொறுப்பில்லைங்கோ. என்ன இருந்தாலும் தல கெத்துதான்ல?

Story first published: Thursday, December 14, 2017, 14:03 [IST]
Other articles published on Dec 14, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+