ஸ்ரேயாஸ் ஐயருக்கு இப்படி ஒரு ரசிகையா??.. மழையினால் நடந்த சுவாரஸ்ய சம்பவம்.. பயிற்சி முகாம் வீடியோ!
ட்ரினிடட்: இந்திய அணியின் பயிற்சி முகாமின் போது, ஒரே ஒரு ரசிகை மட்டும் 2 மணி நேரம் மழையில் காத்திருந்தது கவனத்தை ஈர்த்துள்ளது.
Recommended Video
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரத்தில் நடைபெறுகிறது.
இதற்காக சமீபத்தில் ட்ரினிடட்டிற்கு சென்றடைந்த இந்திய அணி தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

ஒருநாள் கிரிக்கெட் தொடர்
ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், பும்ரா உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களை உள்ளடங்கிய புதிய அணி உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அந்நாட்டிற்கு சென்ற இந்திய வீரர்கள் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பயிற்சி முகாம்
இன்று தொடங்கிய பயிற்சி முகாமில் திடீரென மழைக் குறுக்கிட்டதால், நீண்ட நேரமாக வலைப்பயிற்சி தடைபட்டது. இதனையடுத்து இந்திய அணிக்காக மூடப்பட்ட இடத்தில் வலைப்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இளம் வீரர்கள் அதிரடி ஷாட்களை தவிர்த்து மற்ற பேட்டிங் பயிற்சிகளை பெற்று வருகின்றனர்.

சுவாரஸ்ய நிகழ்வு
இந்நிலையில் இன்று நடைபெற்ற பயிற்சி முகாமில் சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியது. மழைக்குறுக்கீட்டால், வீரர்களை காண முடியாமல் ரசிகர்கள் மைதானத்தில் இருந்து வெளியேறினர். ஆனால் ஒரே ஒரு ரசிகை மட்டும் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழையில் நின்றிருந்துள்ளார். இதற்கு காரணம் ஸ்ரேயாஸ் ஐயரை காண வேண்டும் என்பது தான். அவரின் தீவிர ரசிகையான அவர், ஸ்ரேயாஸை கண்டுவிட வேண்டும் என தீர்மானமாக இருந்துள்ளார்.

ஸ்ரேயாஸை சந்தித்தாரா?
மழையில் தனது ரசிகை தவிப்பதாக கேட்ட ஸ்ரேயாஸ் ஐயர், உடனடியாக அவரை பயிற்சி முகாம் நடக்கும் இடத்திற்கு அழைத்து வரக்கூறினார். ரசிகையுடன் சிறிது நேரம் பேசிய அவர், சிறிய பேட் ஒன்றில் தனது ஆட்டோகிராஃப்பையும் போட்டுக்கொடுத்துள்ளார். இதனால் அந்த ரசிகை மகிழ்ச்சியுடன் புறப்பட்டு சென்றார்.


Click it and Unblock the Notifications