Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மை குட்னெஸ்... நெஹ்ராவை வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்!

பெங்களூர்: பெங்களூரில் இன்று தொடங்கிய 7வது ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் யாருமே எதிர்பாராத வகையில் ஆசிஷ் நெஹ்ராவை ரூ. 2 கோடி கொடுத்து வாங்கியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

ரன்களை வாரி வழங்கும் வள்ளல், பல முக்கியப் போட்டிகளில் தோல்விக்குக் காரணமாக இருந்தவர் என்ற பெருமைகளுக்குரியவர் நெஹ்ரா.

இவருக்கு அடிப்படை விலையாக ரூ. 2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதே தொகைக்கு இவரை வாங்கியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

முதல் நாளான இன்று கீழ்க்கண்ட வீரர்களைத்தான் சென்னை வாங்கியுள்ளது.

பாப் டு பிளஸ்ஸிஸ்

பாப் டு பிளஸ்ஸிஸ்

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பாப் டு பிளஸ்ஸிஸை ரூ. 4.75 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.

வேயன் ஸ்மித்

வேயன் ஸ்மித்

மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் வேயன் ஸ்மித் ரூ. 4.50 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.

பிரன்டன் மெக்கல்லம்

பிரன்டன் மெக்கல்லம்

அடுத்து அதிக விலைக்கு வாங்கப்பட்டவர் நியூசிலாந்தின் பிரன்டன் மெக்கல்லம். இவரது விலை ரூ. 3.25 கோடியாகும்.

ஆசிஷ் நெஹ்ரா

ஆசிஷ் நெஹ்ரா

ஆசிஷ் நெஹ்ராவை ரூ. 2 கோடிக்கு எடுத்துள்ளனர்...

மோஹித் சர்மா

மோஹித் சர்மா

இவரை ரூ. 2 கோடிக்கு மீண்டும் வாங்கியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

ஹில்பென்ஹாஸ்

ஹில்பென்ஹாஸ்

ஆஸ்திரேலியாவின் பெல் ஹில்பென்ஹாஸ் ரூ. 1 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.

அந்த பத்ரி போய் சாமுவேல் பத்ரி

அந்த பத்ரி போய் சாமுவேல் பத்ரி

எஸ்.பத்ரிநாத் சென்னை அணியிலிருந்து நீக்கப்பட்டு விட்ட நிலையில் மேற்கு இந்தியத் தீவுகளின் சாமுவேல் பத்ரியை ரூ. 30 லட்சத்துக்குத் தூக்கி வந்துள்ளனர்.

மாட் ஹென்றி

மாட் ஹென்றி

நியூசிலாந்தின் மாட் ஹென்றியையும் சகாய விலைக்கு அதாவது ரூ. 30 லட்சத்துக்கே வாங்கியுள்ளனர்.

Story first published: Wednesday, February 12, 2014, 18:55 [IST]
Other articles published on Feb 12, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+