
அதிரடி ஆட்டம்
இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் காலிறுதி ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மேற்கு பிராந்திய அணிக்காக ரஹானே, பிரித்வி ஷா, ஜெய்ஷ்வால் உள்ளிட்ட வீரர்கள் விளையாடுகின்றனர். இந்தப் போட்டியில் வடகிழக்கு பிராந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களம் இறங்கிய தொடக்க ஆட்டக்காரர் பிரிதிவி ஷா வழக்கம்போல் அதிரடியாக விளையாடினார்.

ஜெய்ஷவால் அபாரம்
சேவாக் போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 5 சிக்சர்கள், 11 பவுண்டரிகளை விளாசி 121 பந்துகளில் 113 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் இளம் வீரர் ஜெய்ஸ்வாலும் பொறுப்பாக விளையாடி சதத்தை கடந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 206 ரன்களை சேர்த்தது. 3வது வீரராக களமிறங்கிய நட்சத்திர வீரர் ரஹானே ஜோடி சேர்ந்தார். தொடக்கம் முதலே ரஹானே ஆக்கோரஷமாக விளையாடினார்.

ரஹானே இரட்டை சதம்
தனது பழைய ஆட்டத்தை நேர்த்தியான ஷாட்கள் மூலம் ரஹானே ரன் குவித்தார். ஒரு கட்டத்திற்கு மேல் ரஹானேவை பிரிக்க முடியாமல் வடக்கு பிராந்திய அணி வீரர்கள் தடுமாறினர். 264 பந்துகளை எதிர்கொண்ட ரஹானே 207 ரன்களை விளாசி அசத்தினார். இதில் 18 பவுண்டர்களும் ஆறு இமாலய சித்தர்களும் அடங்கும். ஜெய்ஸ்வால் 228 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார் தற்போது ரஹானே 207 ரன்கள் உடன் களத்தில் இருக்கிறார்.

முச்சதத்திற்கு வாய்ப்பு
இதனால் ரஹானேவுக்கு இன்று முச்சதம் விளாச வாய்ப்பு இருக்கிறது. ரஹானே தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பிய காரணத்தால், இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ரஹானே அதிரடியாக நீக்கப்பட்டார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கூட ரஹானே இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில் ஓய்வு நேரத்தில் பயிற்சி மேற்கொண்டுள்ள ரஹானே தற்போது ஃபார்ம்க்கு திரும்பியுள்ளார். இதனால் வங்கதேசத்துக்கு எதிரான வரும் நவம்பர் மாதம் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் ரஹானே இந்திய அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது,


Click it and Unblock the Notifications