Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னங்க உங்களுக்கு பிரச்சினை??.. கோலிக்கு எதிராக மீண்டும் வந்த நிதின் மேனன்.. கடுப்பான ரசிகர்கள்!

அகமதாபாத்: ஆஸ்திரேலிய அணியுடனான 4வது டெஸ்ட் போட்டியில விராட் கோலிக்கு எதிராக வேண்டுமென்றே நிதின் மேனன் மீண்டும் வம்பிற்கு இழுத்ததாக ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணியும் சற்று சலிக்காமல் பதிலடி கொடுத்து வருகிறது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா - சுப்மன் கில் ஜோடி முதல் விக்கெட்டிற்கு 74 ரன்களை சேர்க்க, பின்னர் வந்த வீரர்களும் ரன்னை உயர்த்தி வருகின்றனர்.

இந்திய அணி இன்னிங்ஸ்

இந்திய அணி இன்னிங்ஸ்

சிறப்பாக விளையாடி வந்த ரோகித் சர்மா 35 ரன்கள், சுப்மன் கில் 128 ரன்களையும் சேர்த்து வெளியேற இந்திய அணியை காப்பாற்ற வேண்டிய முழு பொறுப்பையும் விராட் கோலி ஏற்றுக்கொண்டார். சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலி 128 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 59 ரன்களை சேர்த்துள்ளார். ஆட்டமிழக்காமல் அவர் சேர்த்த ரன்களால் இந்திய அணி 289 ரன்களுக்கு 3 விக்கெட்கள் என வலுவான நிலையில் உள்ளது.

நிதின் மேனனின் முடிவு

நிதின் மேனனின் முடிவு

இந்நிலையில் இந்த போட்டியிலும் விராட் கோலிக்கு நடுவர் நிதின் மேனன் பிரச்சினை தர தவறவில்லை. விராட் கோலி 48 ரன்களை அடித்திருந்த போது 2 ரன்கள் ஓடி அரைசதத்தை பூர்த்தி செய்ய நினைத்தார். அதற்கேற்றார் போல மிக வேகமாக ஓடி ரன் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஆனால் கோலியின் ஓட்டத்தில் திருப்தியடையாத அம்பயர் நிதின் மேனன், கிறீஸை சரியாக தொடாமல் சென்றதாக 3வது நடுவருக்கு பரிந்துரைத்தார்.

டி.ஆர்.எஸ் ஆய்வு

டி.ஆர்.எஸ் ஆய்வு

இதனை ஏற்று ரிவ்யூவ் செய்து பார்த்த 3வது நடுவர், பல முறை விராட் கோலி சரியாக மறுமுணையில் உள்ள கிறீஸை தொட்டாரா இல்லையா? என ஆய்வு செய்து பார்த்தார். இதனால் கோலியின் அரைசதத்தை கொண்டாடலாமா வேண்டாமா? என ரசிகர்களும் நீண்ட நேரமாக குழப்பத்தில் இருந்தனர். இறுதியில் சிரித்தபடியே கோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

முதல் முறையல்ல

முதல் முறையல்ல

நிதின் மேனன் - கோலி இடையே இதுபோன்ற குழப்பம் நடைபெறுவது முதல் முறை அல்ல. இதற்கு முன்னர் பல சமயங்களில் கோலிக்கு எதிராக பல சர்ச்சை முடிவுகளை கொடுத்துள்ளார் நிதின் மேனன். சமீபத்தில் கூட முதல் டெஸ்டின் போது விராட் கோலி அரைசதத்தை நோக்கி நகர்ந்தார். ஆனால் கடைசி நேரத்தில் நிதின் மேனன் எல்.பி.டபள்யூ அவுட் கொடுத்துவிட்டார். பேடிலும், பேட்டிலும் ஒரே நேரத்தில் பந்து பட்ட போதும், அவர் அவுட் கொடுத்துவிட்டார்.

Story first published: Saturday, March 11, 2023, 21:16 [IST]
Other articles published on Mar 11, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+