Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அப்படினா நீங்களே அடிக்க வேண்டியதுதானே” அஸ்வினை மட்டம் தட்டிய கே.எல்.ராகுல்.. ரசிகர்கள் கொந்தளிப்பு

டாக்கா: வங்கதேச அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை கேப்டன் கே.எல்.ராகுல் மட்டம் தட்டும் வகையில் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. மேலும் தொடரை 2 - 0 என ஒயிட் வாஷ் செய்தது.

இந்த போட்டியில் இந்திய அணி தோல்விக்கு அருகில் சென்ற போதும், கடைசி நேரத்தில் வெற்றி பெற்றதற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் தான் காரணம் என கூற வேண்டும்.

அஸ்வினின் இன்னிங்ஸ்

அஸ்வினின் இன்னிங்ஸ்

145 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பினர். கேப்டன் கே.எல்.ராகுல், புஜாரா, சுப்மன் கில், கோலி, பண்ட் என அனைவருமே ஏமாற்றியதால் 74/7 விக்கெட்களை இழந்திருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அஸ்வின் மட்டும் 62 பந்துகளில் 42 ரன்களை அடித்து வெற்றியை தேடிக்கொடுத்தார். அவரும் ஸ்ரேயாஸ் ஐயரும் 71 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.

கே.எல்.ராகுலின் செயல்

கே.எல்.ராகுலின் செயல்

இதற்காக அஸ்வினுக்கு பாராட்டு குவிந்து வரும் சூழலில், கே.எல்.ராகுல் மறைமுகமாக மட்டம் தட்டியுள்ளார். போட்டி குறித்து பேசிய அவர், இதுபோன்ற களத்தில் புதிய பந்துகளை எதிர்கொள்வது தான் கடினம்.ஏனென்றால் பந்தில் நல்ல டேர்னிங் இருக்கும். இதனால் டாப் ஆர்டரில் விளையாடுவது கடினமாக இருக்கும். நேரம் போக போக, பந்து சாஃப்ட்டாகி பேட்டிங் செய்வதற்கு ஏதுவாக மாறும்.

 ரசிகர்கள் கோபம்

ரசிகர்கள் கோபம்

அப்படி பார்த்தால் டாப் ஆர்டர் வீரர்கள் சொதப்பியதற்கு புதிய பந்து தான் காரணம், ஆனால் அஸ்வின் எளிதாக அடித்துவிட்டார் என்பது போல கே.எல்.ராகுல் கூறியிருந்தார். இதனால் தான் தற்போது ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். சிக்கலில் இருந்த இந்தியாவை காப்பாற்றியவருக்கு ஒரு பாராட்டுக்கூட கிடையாதா என்ற வகையில் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்தியாவின் காப்பான்

இந்தியாவின் காப்பான்

இந்திய அணியின் ரட்சகனாக அஸ்வின் தற்போது மாறி வருகிறார். உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக வெற்றி பெற்று தந்ததில் இருந்து தற்போது வரை அவரின் இன்னிங்ஸ் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. முதல் டெஸ்டிலும் அஸ்வினின் இன்னிங்ஸ் இந்தியாவின் ஸ்கோரை நல்ல நிலைக்கு கொண்டு சென்றது.

Story first published: Sunday, December 25, 2022, 15:31 [IST]
Other articles published on Dec 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+