For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இருக்கா?? இல்லையா??.. தென்னாப்பிரிக்காவுடனான 4வது டி20 போட்டியில் திடீரென கிளம்பிய குழப்பம் - விவரம்

ராஜ்கோட்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய ரசிகர்களுக்கு திடீர் குழப்பம் உருவாகியுள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் முதல் 2 போட்டிகளை தென்னாப்பிரிக்க வெற்றி பெற்ற சூழலில், 3வது போட்டியில் இந்திய அணி கம்பேக் கொடுத்தது.

 4வது போட்டி

4வது போட்டி

இதனையடுத்து திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடிய 4வது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. தொடரை கைப்பற்ற தென்னாப்பிரிக்க அணியும், சமன் செய்ய வேண்டும் என இந்திய அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

புதிய பிரச்சினை

புதிய பிரச்சினை

இந்நிலையில் இந்த பரபரப்பான போட்டியில் புதிய குழப்பம் உருவாகியுள்ளது. அதற்கு காரணம் வானிலை அறிக்கை தான். இந்தியாவில் வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில், ராஜ்கோட் பகுதியில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் போட்டி தடைபடும் அளவிற்கான கடும் மழை பொழியவுள்ளதாக தெரிகிறது.

என்ன குழப்பம்

என்ன குழப்பம்

மைதானம் அமைந்துள்ள பகுதியில் நேற்றிரவு நல்ல மழை பொழிந்துள்ளது. வீரர்கள் அனைவரும் முன்கூட்டியே பகலில் பயிற்சிகளை முடித்துவிட்டதால் எந்தவித பாதிப்பும் இல்லை. ஆனால் இன்று இரவுதான் போட்டி நடைபெறும் என்பதால் கண்டிப்பாக மழையின் குறுக்கீடு இருக்கும் என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.

பிட்ச் ரிப்போர்ட்

பிட்ச் ரிப்போர்ட்

ராஜ்கோட் மைதானம் எப்போதுமே ஒரு அதிக ஸ்கோர் போட்டியாக தான் இருந்துள்ளது. பேட்ஸ்மேன்களுக்கு நன்கு உதவக்கூடிய பிட்ச் ஆக இருக்கும் என்பதால், முதலில் பேட்டிங் செய்யும் அணி சராசரியாக 183 ரன்கள் வரை குவிக்கலாம். ஆனால் மழை குறுக்கீடு செய்தால், ஈரப்பதத்தால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சற்று உதவக்கூடும்.

Story first published: Friday, June 17, 2022, 10:26 [IST]
Other articles published on Jun 17, 2022
English summary
India vs south africa 4th t20 match ( இந்தியா vs தென்னாப்பிரிக்கா 4வது டி20 போட்டி ) தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் திடீரென குழப்பம் எழுந்துள்ளது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+