Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒத்துக்கவே முடியாது.. சூர்யகுமார் யாதவுக்கு நடந்த அநீதி.. கொந்தளிக்கும் ரசிகர்கள்.. அப்படி என்ன ஆனது

கவுகாத்தி: தென்னாப்பிரிக்க அணியுடனான 2வது போட்டியில் எடுக்கப்பட்ட தவறான முடிவால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

Recommended Video

IND vs SA MOM விருதில் ஏற்பட்ட குளறுபடி KL Rahul வெளிப்படை பேச்சு

கவுகாத்தியில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 237 ரன்களை குவிக்க, பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 221 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இந்திய பேட்டிங்

இந்திய பேட்டிங்

இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது பேட்டிங் தான். ஓப்பனிங் வீரர்கள் கே.எல்.ராகுல் 57 (28), ரோகித் சர்மா 43 (37) என தரமான அடிதளத்தை அமைக்க, பின்னர் வந்த விராட் கோலி 49 (28), சூர்யகுமார் யாதவ் 61 (22), தினேஷ் கார்த்திக் 17 (7) என அடுத்தடுத்து ரன்கள் விளாசினார். இதனால் 20 ஓவர்களில் இந்திய அணி 237 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.

ஆட்டநாயகன் விருது

ஆட்டநாயகன் விருது

இந்நிலையில் போட்டிக்கு பிறகு ஐசிசி அதிகாரிகள் எடுத்த ஒரு முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆட்ட நாயகன் விருதை யாரும் எதிர்பாராத வகையில் கே.எல்.ராகுலுக்கு வழங்கினர். அதிக ஸ்கோர் அடித்த வீரர், அதிக விக்கெட்கள் எடுத்த வீரர் அல்லது இரண்டிலுமே சிறப்பாக இருந்தவர்களுக்கு தான் இந்த விருது வழங்கப்படும். அப்படி பார்த்தால் நேற்று சூர்யகுமார் யாதவுக்கு தான் நியாயப்படி வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

எப்படி தெரியுமா?

எப்படி தெரியுமா?

ஏனென்றால் கே.எல்.ராகுல் 28 பந்துகளில் 57 ரன்களை குவித்தார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 203 ஆகும். ஆனால் சூர்யகுமார் யாதவ் 22 பந்துகளிலேயே 61 ரன்களை குவித்துவிட்டார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 277 ஆகும். இருவருமே எந்தவித கேட்ச்-களும் பிடிக்கவில்லை. இப்படி இருக்கையில் சூர்யகுமார் யாதவுக்கு ஏன் விருது தரப்படவில்லை என ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

என்ன காரணம்

என்ன காரணம்

கே.எல்.ராகுல் கடந்த போட்டியில் ஸ்டரைக் ரேட் குறைவாக உள்ளது என விமர்சனங்களுக்கு ஆளானார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த போட்டியில் ஸ்ட்ரைக் ரேட்டை இரட்டிப்பு ஆகினார். எனவே அந்த கம்பேக்-ஐ மனதில் வைத்து ஆட்ட நாயகன் விருதை வழங்கினார்களோ என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Story first published: Monday, October 3, 2022, 11:46 [IST]
Other articles published on Oct 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+