For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மேட்சில் ‘விடாமுயற்சி’ அப்டேட்.. அலப்பறையை ஆரம்பித்த அஜித் ரசிகர்கள்!

குயானா: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ஆட்டத்தின் போது ரசிகர் ஒருவர் அஜித்தின் விடாமுயற்சி அப்டேட் கேட்டு போர்டு வைத்த புகைப்படம் சமூக வைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

அண்மை காலமாக நடிகர் அஜித் குமார் ரசிகர்களின் அலப்பறை அதிகரித்துக் கொண்டே போகிறது. சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது மொயின் அலியிடம் "வலிமை அப்டேட்" கேட்டு மிரள வைத்தனர். இதையடுத்து கிரிக்கெட் வீரர்கள் விளையாடும் இடமெல்லாம் வலிமை அப்டேட் வாசகம் வைத்து ரசிகர்கள் வேற லெவல் அலப்பறையை கூட்டினர்.

Fans asks Ajith Kumar Vidaa Muyarchi Update in West Indies vs India 3rd T20 Match at Guyana

இதனை புரிந்து கொண்டு வலிமை படக்குழுவும் வலிமை அப்டேட்டை வெளியிட்டது. தற்போது நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தைல் மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். அதேபோல் அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மே 1ஆம் தேதி அறிவிப்பு வெளியான பின், இதுவரை எந்த அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை.

இந்த நிலையில் விரக்தியடைந்த ஏகே ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விடாமுயற்சியை ட்ரெண்ட் செய்ய தொடங்கினர். இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது ரசிகர்கள் ஒருவர் விடாமுயற்சி அப்டேட் கேட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் சேர்த்தது. இதன்பின் 160 ரன்களை சேஸிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மா கூட்டணியின் அபார ஆட்டத்தால் இந்திய அணி வெற்றிபெற்றது.

இந்தப் போட்டிக்கு இடையே ரசிகர் ஒருவர் ஏகே 62: விடாமுயற்சி அப்டேட் என்ற வாசகத்துடன் காணப்பட்டார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் வலிமை அப்டேட் போல் விடாமுயற்சி அப்டேட்டை எந்த வெளிநாட்டு வீரரிடம் ஏகே ரசிகர்கள் கேட்க போகிறார்களோ என்று கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.

Story first published: Wednesday, August 9, 2023, 13:58 [IST]
Other articles published on Aug 9, 2023
English summary
IND vs WI: After Valimai Update trolls, Now Ajith Kumar fans started asked Vidaa Muyarchi update during Cricket Matches.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+