ஆட்டநாயகன் விருது வென்ற குல்தீப் நீக்கம்..என்ன முட்டாள்தனமான முடிவு..ராகுலை வச்சு செய்யும் ரசிகர்கள்
டாக்கா : வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் யுத்தி ரசிகர்களை வெறுப்படைய செய்துள்ளது. சுழற்பந்துவீச்சுக்கு சாதகான மைதானத்தில் 3 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் 2 சுழற்பந்துவீச்சாளர்களை கொண்டு இந்திய அணி விளையாடுவது கிரிக்கெட் விமர்சகர்களை அதிர்சசி அடைய செய்துள்ளது.
அதாவது இந்திய அணியில் யாராவது எதாவது சாதனை செய்தார்கள் என்றால், அவரை அடுத்த போட்டியிலேயே நீக்கும் தவறான யுத்தியை கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இந்திய அணி செய்து வருகிறது.
முச்சதம் விளாசிய இந்திய வீரர், கருண் நாயர் ரஹானேவுக்காக நீக்கப்பட்ட கொடுமையும் வேறு எந்த அணியிலும் நடைபெறாது. தற்போது மீண்டும் இந்திய அணி நிர்வாகம் இப்படி ஒரு தவறை தான் செய்துள்ளது.

அதிர்ச்சி முடிவு
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்டில் குல்தீப் யாதவ் பேட்டிங்கில் 40 ரன்கள் விளாசியதுடன், பந்வீச்சில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இதற்காக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது ஆனால், சுழற்பந்துவீச்சுக்கு சாகமான மைதானத்தில் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு இருக்கிறார். கல்தீப் முழு உடல் தகுதியுடன் இருந்தும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது தான் அதிர்ச்சியே.

ஆடுகளம்
தற்போது 2வது டெஸ்டில் 50 ஓவர் நிலவரப்படி வங்கதேச அணி 176 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதில் வேகப்பந்துவீச்சாளரான முகமது சிராஜ் 9 ஓவர் வீசி ஒரு ஓவருக்கு 4 ரன்களை கொடுத்து இருக்கிறார். உமேஷ் யாதவ் கட்டுக்கோப்பாக பந்துவீசினாலும், உனாட்கட் மட்டும் தான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

ராகுல் பிளான்
இதனால், இந்திய அணி எதற்கு 3 வேகப்பந்துவீச்சாளர்கள் வைத்து விளையாடுகிறார்கள், ஏன் இந்த முட்டாள் தனமான முடிவு என்று கேஎல் ராகுலை சமூக வலைத்தளத்தில் போட்டு ரசிகர்கள் தாக்கி வருகின்றனர். குல்தீப் யாதவ் அணியில் தனது இடத்தை உறுதி செய்தவிட்டால், ரோகித் வந்த பிறகு ராகுல் தான் வெளியேற வேண்டும்

பிசிசிஐ அரசியல்
அதற்கு பயந்து தான் 2 சுழறபந்துவீச்சாளர்களுடன் விளையாடும் முடிவை ராகுல் எடுத்திருக்கிறார். அடுத்த டெஸ்டில் இந்தியா விளையாடும் போது கூடுதலாக இருக்கும் ஒரு வேகப்பந்துவீச்சாளரை எடுத்து விடலாம் அல்லவா. இதனால் ராகுல் இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்று ரசிகர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்திய அணியில் திறமைக்கு அங்கீகாரம் தராமல், வெறும் அரசியல் தான் நடப்பதாக ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications