இந்தியாவிற்காக எவ்வளவு செய்தார்.. அவர் மீது மத சாயமா.. கிரிக்கெட் வீரர் மீது புகார்.. திரண்ட படை!
சென்னை: மூத்த கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் மீது வைக்கப்பட்டு உள்ள மத ரீதியாக புகார்கள் மற்றும் புரளிகளுக்கு எதிராக கிரிக்கெட் ரசிகர்கள் குரல் கொடுத்துள்ளனர்.
உத்தரகாண்ட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து வாசிம் ஜாபர் பதவி விலகி இருக்கிறார். விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இவர் பதவி விலகி உள்ளார்.
இவரின் பதவி விலகல் இணையத்தில் இரண்டு விதமான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. ஜாபருக்கு ஆதரவாக நெட்டிசன்கள் பலர் கருத்து கூறி வருகிறார்கள்.

எப்படி
உத்தரகாண்ட் அணியில் திறமையான வீரர்களுக்கு மதிப்பில்லை. பழைய வீரர்களை மட்டுமே எடுக்கிறார்கள். அணி தேர்வில் பாகுபாடு காட்டப்படுகிறது. அணி தேர்வில் குளறுபடி நடக்கிறது. இதனால் பதவி விலகுகிறேன் என்று குறிப்பிட்டு வாசிம் ஜாபர் பதவி விலகி உள்ளார்.

பதவி விலகல்
இன்னொரு பக்கம் ஜாபருக்கு தேவையான உதவிகளை நாங்கள் செய்தோம். அவர் கேட்டதை எல்லாமே நாங்கள் கொடுத்தோம். ஆனாலும் சையது முஷ்டாக் கோப்பையில் அவரால் வெல்ல முடியவில்லை. இந்த நிலையில் தற்போது பதவி விலகி உள்ளார் என்று உத்தரகாண்ட் கிரிக்கெட் வாரியம் இவர் மீது புகார் வைத்துள்ளது.

ஊடகம்
இந்த நிலையில் சம்பந்தமே இல்லாமல் ஊடகம் ஒன்றில் வாசிம் ஜாபர் மத ரீதியான வேறுபாடு காட்டினார். சீக்கிய மற்றும் இந்து மதத்திற்கு எதிராக பேசினார். இதனால்தான் அவர் பிரச்சனையில் சிக்கினார். இப்போது பதவி விலகிவிட்டார் என்று கூறப்பட்டது. இதுதான் தற்போது சர்ச்சையாகி உள்ளது.

கருத்து
மூத்த கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் மீது வைக்கப்பட்டு உள்ள மத ரீதியாக புகார்கள் மற்றும் புரளிகளுக்கு எதிராக கிரிக்கெட் ரசிகர்கள் குரல் கொடுத்துள்ளனர். அதில், ஜாபர் இந்திய கிரிக்கெட்டுக்காக நிறைய செய்துள்ளார். அவர் மீது மத சாயம் பூசுவதை ஏற்க முடியாது. முதல் தர போட்டிகளில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் ஜாபர்.

ஜாம்பவான்
தற்போது பல்வேறு அணிக்கு பயிற்சி வழங்கி வருகிறார். முதல் தர போட்டிகளில் அவர் 11 ஆயிரம் ரன் அடித்தவர். அவரை போய் இப்படி அவமானப்படுத்துவது சரியாக இருக்காது. இதற்கு நாம் வெட்கப்பட வேண்டும், என்று கிரிக்கெட் ரசிகர்கள் பலர் ஜாபருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications