For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

காசு கொடுக்கிறாங்க.. மேட்சை பாக்குறாங்க… யாருக்கு சப்போர்ட் பண்ணுனா என்ன? கவலையில்லாத தோனி

Recommended Video

IPL 2019: காசு கொடுத்து ஆட்டத்தை பாக்குறாங்க, கவலையில்லாமல் கூறும் தோனி- வீடியோ

மும்பை : பணத்தை செலவு செய்து நேரில் வந்து போட்டியை ரசிப்பவர்கள் எந்த அணியை ஆதரித்தாலும் தமக்கு ஓகே தான் என்று தோனி கருத்து கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் 28 ஆண்டு கால கனவான உலக கோப்பையை 8 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்கு பெற்று தந்தவர் தோனி. செல்லமாக தல தோனி என்று அழைக்கப்படும் அவருக்கு ரசிகர்கள் ஏராளம்.

8 ஆண்டுகள் ஆன இந்த தினத்தை அவரது ரசிகர்கள் ஏகத்துக்கும் கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில், மற்ற ரசிகர்களை விட சென்னை ரசிகர்கள் அவருக்கு பிடித்தமான ஒன்று.

MS Dhoni: மறக்க முடியுமா? ஏப்.2, 2011... 28 ஆண்டு கால கனவு.. அந்த நாளை இன்றும் கொண்டாடும் ரசிகர்கள் MS Dhoni: மறக்க முடியுமா? ஏப்.2, 2011... 28 ஆண்டு கால கனவு.. அந்த நாளை இன்றும் கொண்டாடும் ரசிகர்கள்

மறக்க முடியாத ரசிகர்கள்

மறக்க முடியாத ரசிகர்கள்

சென்னை ரசிகர்களின் அன்பு தமக்கு பிடித்தமான ஒன்று... அவர்களை மறக்கவே முடியாது என்று பலமுறை அவர் உணர்ச்சிப்பெருக்குடன் கூறி இருக்கிறார்.

பட்டியலில் முதலிடம்

பட்டியலில் முதலிடம்

இந்த ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் வெற்றியை பெற்று, புள்ளிகள் பட்டியலில் சென்னை அணி முதலிடத்தை பிடித்திருக்கிறது. இந் நிலையில் அவர் ரசிகர்கள் பற்றி கூறியிருப்பதாவது:

பிட்ச் பற்றி கருத்து

பிட்ச் பற்றி கருத்து

ராஜஸ்தான் அணிக்கு எதிராக பார்ட்னர்ஷிப் வேண்டும் என்று விரும்பினோம், ஆட்டம் செல்லச்செல்ல பிட்ச் எளிதாகும் என்று எண்ணினோம். அணியில் சாண்ட்னரை கொண்டு வர காரணம் ராஜஸ்தானில் இடது கை வீரர்கள் இல்லை என்பதால் தான்.

மாற்றங்கள் தேவை

மாற்றங்கள் தேவை

வலது கை வீரர்கள் அதிகம் இருந்ததால் ஹர்பஜன் சிங்குக்கு பதில் சாண்ட்னரை கொண்டு வந்தோம். தேவையில்லாமல் மாற்றங்கள் நாங்கள் எப்போதும் செய்ய மாட்டோம்.

சிரமம் இருந்தது

சிரமம் இருந்தது

தொடரில் ஒவ்வொருவருக்கும் விளையாட வாய்ப்பளிக்கப்படும். பேட்ஸ்மென்கள் ஜடேஜா, சாண்ட்னர் பந்தை எதிர்கொள்வதில் சிரமம் கண்டனர்.

ஆதரவு தருவர்

ஆதரவு தருவர்

எப்போதுமே உள்ளூர் அணிக்கு அதிக ஆதரவு இருக்கும். அவர்களுக்கு தான் ரசிகர்களும் ஆதரவு தெரிவிப்பார்கள். இதை தான் ஸ்பிரிட் ஆப் த கேம் என்று கூறுவார்கள்.

பிரச்னை இல்லை

பிரச்னை இல்லை

கிரிக்கெட் விளையாட்டை பரவலாக சுவாரஸ்யமாக்குவதும் இதுதான். பணம் கொடுத்து போட்டியை நேரில் காணும் ரசிகர்கள் எந்த அணியை ஆதரித்தாலும் பிரச்சினையில்லை என்றார்.

Story first published: Tuesday, April 2, 2019, 14:36 [IST]
Other articles published on Apr 2, 2019
English summary
Dhoni has said that fans are spending to watch game and its ok whom they want to support.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X