Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி… தோனி… தோனி…!! பயிற்சி ஆட்டத்தின் போது ரசிகர்களின் ஆரவாரத்தால் அதிர்ந்த ஓவல் மைதானம்

ஓவல்:நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பவுண்டரி எல்லை அருகே பீல்டிங் செய்த தோனியை பார்த்து ரசிகர்கள் ஆரவார கூச்சலிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

உலக கோப்பை தொடரில் பங்கேற்க இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. 10 அணிகள் அணிகள் மோதும இந்த தொடர் தொடங்குவதற்கு முன் அனைத்து அணிகளும் 2 பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்கின்றன. முதல்பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் மோதியது.

Fans chanted when dhoni fields against new zealand warm up match

போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 179 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி சார்பில் ஜடேஜா 54 ரன்கள் எடுத்தார். அதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை எளிதாக வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் தோனிக்கு பதிலாக தினேஷ் கார்த்தி விக்கெட் கீப்பராக இருந்தார். சிறிது நேரம் ஓய்வெடுத்த தோனி பின் பவுண்டரி எல்லை கோட்டுக்கு அருகே பீல்டிங் செய்தார். தோனி பவுண்டரிக்கு அருகே பீல்டிங் செய்த போது ஓவல் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.


பந்தை எடுத்து அவர் பீல்டிங் செய்த போது... தோனி, தோனி என்று ரசிகர்கள் ஒட்டு மொத்தமாக ஆரவார கூச்சல் எழுப்பினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய அணிக்காக ஆரம்ப காலத்தில் பீல்டிங் செய்த தோனி பல ஆண்டுகளுக்கு பின் இப்போது தான் பீல்டிங் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Sunday, May 26, 2019, 18:34 [IST]
Other articles published on May 26, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+