நீங்க பாவ்லா காட்டுனது.. டிராமா போட்டது எல்லாம் தெரியும்.. புட்டு புட்டு வைக்கும் ரசிகர்கள்!
Recommended Video
மும்பை : ரவி சாஸ்திரி மீண்டும் பயிற்சியாளர் பதவி பெற்றதில் கேப்டன் விராட் கோலியின் பங்கும் உள்ளது எனக் கருதுகிறார்கள் இந்திய ரசிகர்கள்.
இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளர் பதவியில் இருக்கும் ரவி சாஸ்திரியின் பதவிக் காலம் ஜூலை மாதத்துடன் முடிவுக்கு வந்தது.
அவருக்கு நீட்டிப்பு வழங்காமல் அடுத்த பயிற்சியாளரை தேர்வு செய்ய விண்ணப்பம் பெறப்பட்டது. ரவி சாஸ்திரி நேரடியாக இறுதிக் கட்ட தேர்வுக்கு அழைக்கப்பட்டு தேர்வும் செய்யப்பட்டார். இதை கடுமையாக விமர்சித்து, கலாய்த்து வருகின்றனர்.

மொத்தமாக டிராமா
கபில் தேவ் தலைமையிலான மூவர் குழு ஆறு பேரிடம் நேர்முகத் தேர்வு நடத்தி இறுதியில் ரவி சாஸ்திரிக்கு மீண்டும் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இது மொத்தமாக டிராமா என ரசிகர்கள் பொங்கி வருகின்றனர். எதற்காக எல்லோரிடமும் விண்ணப்பம் பெறப்பட்டது என்றும் கேட்டு வருகின்றனர்.
தோல்வி
ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளர் மற்றும் அணி மானேஜராக இருந்த வரை இந்திய அணி ஐசிசி தொடர்களில் வெற்றி பெறவில்லை. அதைக் குறிப்பிட்டு அடுத்து நடக்க இருக்கும் இரண்டு டி20 உலகக்கோப்பைகளிலும் இந்தியா தோல்வி அடையும் என கூறி வருகிறார்கள்.

மதிப்பெண் போட்டோம்
கபில் தேவ் தேர்வுக்கு பின் அளித்த பேட்டியில் கேப்டன் விராட் கோலியிடம் எந்த வகையிலும் நாங்கள் கருத்து கேட்கவில்லை. நாங்களாகவே மதிப்பெண் போட்டுத் தான் தேர்வு செய்தோம் என கூறினார்.

எந்த மாற்றமும் இல்லை
ஆனால், இந்த தேர்வுக்கு சில வாரங்கள் முன்பு இருந்தே இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. அதற்கு முக்கிய காரணம், கேப்டனுக்கு பிடித்த பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தான் என செய்திகள் வந்து கொண்டு இருந்தன. இறுதியாக அதே தான் நடந்தது.

எல்லாமே பாவ்லா
ஆனால், எல்லாமே விதி முறைப்படி நடந்ததாக பாவ்லா காட்டப்பட்டதாக ரசிகர்கள் கூறுகிறார்கள். கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே கூட சூசகமாக இந்த தேர்வை கிண்டல் அடித்துள்ளார். விராட் கோலி தான் காரணம் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.

ஒன்று மட்டும் தான் நிச்சயம்
"எதையும் உறுதியாக சொல்ல முடியாத இந்த உலகத்தில் ஒன்று மட்டும் தான் நிச்சயம். ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக தொடர்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை" என கூறி உள்ளார் ஹர்ஷா போக்லே. இதே விஷயத்தை ஒரு ரசிகர் வேற லெவலில் கிண்டல் அடித்துள்ளார்.
ராக்கி சாவந்த் வந்தாலும்..
கோலி மகிழ்ச்சியாக இருக்கும் வரை ரவி சாஸ்திரி பயிற்சியாளராக தொடர்வதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அது தான் முக்கியமான விஷயம். கோலி ராக்கி சாவந்தை இந்தியாவின் அடுத்த கோச்சாக தேர்வு செய்தால் கூட எனக்கு கவலை இல்லை. அவருக்கு எது வேலை செய்கிறதோ, அது எனக்கும் வேலை செய்யும் என கிண்டல் அடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications