For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என் கட்சிக்காரன் அப்படி என்னய்யா தப்பு செஞ்சுட்டான்.. தோனிக்கு ஆதரவாக களம் குதித்த ரசிகர்கள்! #Dhoni

Recommended Video

நோ பால் விவகாரம் : பொறுமை இழந்த தோனி

சென்னை: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கட்டக் கடைசி ஓவரில் நடந்த பெரும் பஞ்சாயத்து பரபரப்பைக் கிளப்பி விட்டது. கூல் கூல் கேப்டன் தோனி நேற்று டென்ஷனாகி ஆவேசமாக மைதானத்திற்குள் நுழைந்தது அனைவரையும் அதிர வைத்து விட்டது.

ஆனால் தோனி மீது என்ன தப்பு. தேவையில்லாமலா உள்ளே நுழைந்தார். அம்பயர் முதலில் நோபால் என்று கையை தூக்கி விட்டு பின்னர் மறுத்ததால்தான் கோபமாகி உள்ளே வந்தார். இதில் என்ன தப்பு என்று ரசிகர்கள் கொதித்துக் கிளம்பியுள்ளனர்.

தோனி மைதானத்திற்குள் வந்த வேகத்தைப் பார்த்தபோது ஆஹா.. தலைக்கு கோபம் வந்துருச்சே.. எத்தனை தலை உருளப் போகுதோ என்பது போலத்தான் இருந்தது. இந்த சம்பவத்தை வைத்து டிவிட்டரில் பெரிய சம்ஹாரமே நடந்து கொண்டிருக்கு.. வாங்க வேடிக்கை பார்த்துட்டு வருவோம்...

என்ன தப்பு இதுல

ரோஹித் என்பவர் போட்டுள்ள பதிவு .. தோனி தேவையில்லாமல் நுழையவில்லை. முதலில் நடுவர் நோபால் என்று சொல்லி விட்டு பின்னர் ரத்து செய்ததால்தான் அவர் உள்ளே புகுந்தார். அதற்கு அவருக்கு உரிமை உள்ளது. தோனிக்கு யாரும் நாகரீகம் குறித்து கற்றுக் கொடுக்கத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

இவன்தான் தலைவன்

சும்மா திட்டணும்னு திட்டாதீங்க. நோபால் சொல்லிட்டு ரத்து செய்தா தப்பு இல்லையா. வாயை மூடிட்டு இருக்கணுமா. அணிக்கு அநீதி இழைத்தபோது தான் தட்டிக் கேட்டார் தோனி. இவர்தான் உண்மையான லீடர்.. நல்லா பண்ணுனீங்க தல.

வாவ்.. மைண்ட் புளோயிங்!

நான் தோனியை இதுபோல பார்த்ததே இல்லை. சிங்கம் போல உள்ளே வந்த அந்தக் காட்சி.. பெஸ்ட்!.. மைன்ட் புளோயிங்.

ஏன் இப்படி எந்திரி பக்கி

போடு நல்லா நாலு போடு போடு.. ஏன் பக்கி இப்படி!

பார்ரா

ஐபிஎல் போட்டியின் விதிமுறைகளை மீறியதால் போட்டி ஊதியத்திலிருந்து 50% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது... இஞ்சார்ரா....!

உண்மை பயப்படாது

பொய்தான் பயப்படும்.... உண்மை என்னைக்குமே பயப்படாது.. தலைவன் #தோனி 🔥

Story first published: Friday, April 12, 2019, 11:46 [IST]
Other articles published on Apr 12, 2019
English summary
MSD Fans have erupted in support of Dhoni's angry against a No Ball controversy on field.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X