Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"இந்திய 'ஏ' அணியுடன் மோதுவது அவமானம்!" - வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிய இலங்கை "டான்"

கொழும்பு: இந்திய 'ஏ' அணியுடன் விளையாட வைத்து இலங்கையை அவமானப்படுத்திவிட்டதாக வேதனைப்பட்ட முன்னாள் இலங்கை வீரர் இப்போது ஆல் அட்ரஸ் இல்லாமல் இருக்கிறாராம்.

Recommended Video

India A அணியுடன் விளையாடுவது அவமானம் - Arjuna Ranatunga

விராட் கோலி தலைமையிலான இந்திய மெயின் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பதால், 20 வீரர்களை கொண்ட மற்றொரு அணியை இலங்கைக்கு அனுப்பியது பிசிசிஐ.

அணியில் பெரும்பாலும் இருந்தது இளம் வீரர்களே. கேப்டனாக ஷிகர் தவானை நியமித்து, ராகுல் டிராவிட்டை பயிற்சியாளர் ஆக்கியது.

பலவீனமான அணி

பலவீனமான அணி

ஆனால், இந்த அணியை இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜுன் ரணதுங்கா விரும்பவில்லை. மிகவும் அதிருப்தி அடைத்தார். இதுகுறித்து அவர் பகிரங்கமாகவே சில கருத்துக்களையும் வெளியிட்டிருந்தார். அதில், "இரண்டாம் தர இந்திய அணி, இங்கு வந்திருப்பது எங்கள் கிரிக்கெட்டை அவமதிப்பதாகும். வருமான தேவைகள் காரணமாக இந்திய பி அணியுடன் விளையாட ஒப்புக்கொண்டதற்கு தற்போதைய இலங்கை நிர்வாகத்தை நான் குற்றம் சாட்டுகிறேன். இந்தியா தங்கள் சிறந்த அணியை இங்கிலாந்துக்கு அனுப்பி பலவீனமான அணியை இங்கு விளையாட அனுப்பியது. இதற்கு எங்கள் வாரியத்தை தான் குறை கூற முடியும்" என்று ஆக்ரோஷமாக பேசியிருந்தார்.

படுதோல்வி

படுதோல்வி

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில், இலங்கை அணி நிர்ணயித்த 262 ரன்களை, வெறும் 36.4வது ஓவரில், 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றிப் பெற்றது இந்தியா. இலங்கை அணியில் சீனியர் வீரர்கள் இல்லையென்றாலும் அது மெயின் அணியாகவே கருதப்பட்டது. இந்த சூழலில், இந்தியாவிடம் படுதோல்வி அடைந்திருக்கிறது இலங்கை.

இப்ப என்ன சொல்றீங்க?

இப்ப என்ன சொல்றீங்க?

எனினும், இந்த தோல்வி குறித்து அர்ஜுனா ரணதுங்கா இதுவரை எந்த கருத்தும் வெளியிடவில்லை. இதுகுறித்து ரசிகர்கள் பலரும் சமூக தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதில், "இலங்கை அணியை அவமதித்துவிட்டதாக கூறினீர்களே.. இப்போது என்ன சொல்கிறீர்கள்?.. இந்திய ஏ அணியை கூட உங்களது மெயின் அணியால் வீழ்த்த முடியவில்லையே என்று அவரை குறிப்பிட்டு ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

மெத்தனம் கூடாது

மெத்தனம் கூடாது

எனினும், இத்தொடரில் ஒரேயொரு போட்டி மட்டும் முடிந்துள்ளது. இன்னும் 2 ஒருநாள் போட்டிகள் மீதமுள்ள என்பதை ரசிகர்கள் மறந்துவிடக் கூடாது. சொந்த மண்ணில், இந்திய அணிக்கு எதிராக இப்படியொரு மோசமான தோல்வியை சந்தித்து இருக்கும் இலங்கை, அடுத்த போட்டியில் இந்திய அணியை வீழ்த்த கடும் முயற்சி மேற்கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே, இந்தியா மெத்தனமாக இல்லாமல், சற்று உஷாராக இருப்பதே நல்லது.

Story first published: Monday, July 19, 2021, 17:03 [IST]
Other articles published on Jul 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+