எல்லை மீறி செல்லும் ஊர்வசி - ரிஷப் பண்ட் சண்டை.. யார் கூறுவது உண்மை?.. இணையத்தில் வெடிக்கும் போர்!!
மும்பை: ரிஷப் பண்ட் - ஊர்வசி ரவுத்தேலா இடையேயான பிரச்சினை சமூக வலைதளங்களில் பூகம்பமாய் வெடித்துள்ளது.
பாலிவுட்டில் வளர்ந்து வரும் கதாநாயகியான ஊர்வசி ரவுத்தேலா சமீபத்தில் நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.
அந்த நிகழ்ச்சியில் ரிஷப் பண்ட் குறித்து அவர் கூறிய மறைமுக கருத்து தான் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நடிகையின் நேர்காணல்
அந்த நிகழ்ச்சியில், " நான் டெல்லியில் ஷூட்டிங்கிற்காக சென்றிருந்த போது RP என்ற பிரபலம் என்னை காண்பதற்காக 10 மணி நேரத்திற்கும் மேலாக ஹோட்டலில் காத்திருந்தார். மேலும் எனக்கு 15 - 20 முறை போன் கால் செய்து கடுமையாக முயற்சித்தார்" எனக்கூறியிருந்தார். அவர் மறைமுகமாக ரிஷப் பண்ட்-ஐ தான் கூறுகிறார் என ரசிகர்கள் உறுதி செய்தனர்.

வார்த்தை சண்டை
இதற்கு ரிஷப் பண்ட், வீண் விளம்பரத்திற்காக ஏன் இவ்வளவு கீழ்தரமான செயல்களில் ஈடுபடுகின்றனர் எனத்தெரியவில்லை என கடுமையாக பேச, நடிகை ஊர்வசியும் கோதாவில் இறங்கியுள்ளார். அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், சின்ன பையா, கிரிக்கெட் ஆடுவதை மட்டும் பாருங்கள். சிறுக்குழந்தையை வைத்து பிரபலமாகும் பெண் நான் கிடையாது என காட்டமாக பதில் அளித்திருந்தார்.

உண்மை தன்மை என்ன?
இந்நிலையில் இருவரில் யார் கூறுவது உண்மை என தெரியாமல் ரசிகர்கள் ஊர்வசி ரவுத்தேலாவை ரசிகர்கள் மோசமாக விமர்சித்து வருகின்றனர். கடந்த 2018ம் ஆண்டு பண்ட் , ஊர்வசி இருவரும் ஒன்றாக ஊர்சுற்றி வந்த புகைப்படங்கள் வெளியாகின. மேலும் இருவரும் காதலிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் சரியாக ஓராண்டிற்கு பிறகு 2019ல் காதல் தகவலை ரிஷப் பண்ட் மறுத்தார்.

வெடிக்கும் சர்ச்சை
எனவே ஊர்வசி கூறியதை போன்று ரிஷப் பண்ட் உண்மையில் நீண்ட நேரம் காத்திருக்க வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். மற்றொரு புறம் தேவையின்றி ரிஷப் பண்ட் மீது குற்றம் சுமற்றி ஊர்வசி விளம்பரம் தேடுவதாக விமர்சனங்கள் எழுவதால், ட்விட்டரில் போர் வெடித்துள்ளது.


Click it and Unblock the Notifications