For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வேலையை காட்டிய கேஎல் ராகுல்.. ஃபார்மிற்கு வராத விராட் கோலி.. திணறும் இந்திய டாப் ஆர்டர்..என்ன ஆச்சு?

டாக்கா: வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி அரையிறுதியோடு தோல்வியடைந்து வெளியேறியதற்கு தொடக்க வீரர் கேஎல் ராகுலின் சுயநல ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து கேஎல் ராகுலின் ஃபார்ம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

அதுமட்டுமல்லாமல் கேஎல் ராகுலுக்கு பதில் மாற்று வீரரை இந்திய அணிக்கு விளையாட தேர்வு செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இதனிடையே வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கேஎல் ராகுல் மிடில் ஆர்டரில் களமிறங்கி சிறப்பாக ஆடினார்.

இந்திய டாப் ஆர்டர்

இந்திய டாப் ஆர்டர்

இதனைத் தொடர்ந்து கேஎல் ராகுல் மீண்டும் ஃபார்மிற்கு வந்துவிட்டதாக ரசிகர்கள் மகிழ்ந்தனர். ஆனால் ரோகித் சர்மா காயம் காரணமாக விலகிய நிலையில், கேஎல் ராகுலுக்கு கேப்டன்சி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. வங்கதேச அணிக்குஎ எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றாலும், கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி பேட்டிங் ஃபார்ம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

சொதப்பும் கேஎல் ராகுல்

சொதப்பும் கேஎல் ராகுல்

இதனால் இரண்டாம் டெஸ்ட் போட்டியில் கோலி மற்றும் ராகுல் இருவரும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேஎல் ராகுல் வெறும் 10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதேபோல் முதல் டெஸ்ட் போட்டியில் 22 மற்றும் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். கடைசியாக இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல், அதன் பின்னர் எந்த டெஸ்ட் போட்டியிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

விராட் கோலி ஃபார்ம்

விராட் கோலி ஃபார்ம்

மறுபக்கம் விராட் கோலி உணவு இடைவேளை வரை சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், 24 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஃபார்மில் இருக்கும் விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போது மீண்டும் ஃபார்மிற்கு வருவார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

மிடில் ஆர்டர் நம்பிக்கை

மிடில் ஆர்டர் நம்பிக்கை

இந்திய அணியை பொறுத்தவரையில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் சிறந்த ஆட்டத்தால் மட்டுமே வெற்றிகளை குவித்து வருகிறது. அதேபோல் டவுன் ஆர்டரில் அஸ்வின், அக்சர் படேல் உள்ளிட்டோரும் பேட்டிங்கில் சிறப்பாக ஆடுவதால், இந்திய அணி தப்பித்து வருகிறது.

Story first published: Friday, December 23, 2022, 14:08 [IST]
Other articles published on Dec 23, 2022
English summary
Indian captain KL Rahul and Virat Kohli were dismissed for short runs in the second Test match against the Bangladesh team, which has created turmoil among the fans.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+