
பாராட்டு
இந்திய அணியின் இந்த காரியம் பெரிய அளவில் பாராட்டப்பட்டது. அதே சமயம் இந்திய அணி இப்படி செய்தது கிண்டலாகத்தான். ஆஸ்திரேலிய வீரர்களை சீண்டும் வகையில் இந்திய அணி வீரர்கள் இப்படி டி ஷர்டை பரிசாக வழங்கி உள்ளனர் என்று சிலர் இணையத்தில் குறிப்பிட்டு இருந்தனர்.

இங்கிலாந்து
இந்த நிலையில் தற்போது இங்கிலாந்து உடன் இந்திய அணி மோதி வருகிறது. இதில் முதல் டெஸ்டில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இது இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட்டுக்கு 100வது டெஸ்ட் ஆகும். ஆனால் இதில் இங்கிலாந்து அணியின் கேப்டனுக்கு இந்திய அணி ஜெர்சி எதையும் பரிசாக அளிக்கவில்லை.

கிண்டல்
இதை இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கல் வாகன் குறிப்பிட்டு கிண்டல் செய்துள்ளார். அதில், இந்திய அணி நாதன் லைனுக்கு அவரின் 100வது டெஸ்டில் டீ ஷர்ட் கொடுத்தது. அதேபோல் ரூட்டுக்கு அவரின் 100வது டெஸ்டில் இந்திய அணி தோல்விக்கு பின் ஜெர்சி கொடுத்தார்களா? கொடுத்த மாதிரி தெரியவில்லையே என்று கேட்டு கிண்டல் செய்துள்ளார்.

கிண்டல்
அதாவது இந்தியா தோல்வி அடைந்துவிட்டது. இதனால் இந்திய அணி ஜெர்சி கொடுக்காது என்று கிண்டலாக குறிப்பிட்டு கேலி செய்துள்ளார். இந்த நிலையில் மைக்கேல் வாகனுக்கு இந்திய ரசிகர்கள் கடுமையான பதிலடி கொடுத்துள்ளனர். அதில் ஜெர்சி எல்லாம் தகுதியானவர்களுக்கு கொடுக்கப்படும்.. இதையே பிச்சை எடுத்து கேட்க கூடாது என்றுள்ளனர்.
விளாசல்
இன்னும் சிலர் ரூட்டுக்கு ஹோட்டல் அறையில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அவரை சென்னையில் சிறப்பாக கவனிக்கிறார்கள் இது போதாதா? சென்னையில் இங்கிலாந்து வீரர்கள் இந்திய வீரர்களை விட அதிகம் கொண்டாடப்படுகிறார்கள், இது போதாதா என்று பதில் அளித்துள்ளனர். இதற்கான வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications