Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜோ ரூட்-லாம் ஒரு ஆளே இல்லை.. சீண்டும் வேலை வச்சுக்காதீங்க.. பொங்கி எழுந்த விராட் கோலி ரசிகர்கள்

மும்பை: இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 33 வது டெஸ்ட் சதம் அடித்து டெஸ்ட் வரலாற்றில் பல்வேறு சாதனைகளை படைத்தார். தற்போது டெஸ்ட் கிரிக்கெட் ஆடி வரும் வீரர்களிலேயே அதிக ரன்கள் மற்றும் அதிக சதங்கள் அடித்து சாதனை படைத்திருந்தார்.

இந்த நிலையில் மற்றொரு சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆக அறியப்படும் விராட் கோலியுடன், ஜோ ரூட்டின் செயல்பாட்டை ஒப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார் முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன். அதற்கு விராட் கோலி ரசிகர்கள் கடுமையான எதிர்வினை ஆற்றி இருக்கின்றனர்.

virat kohli joe root


விராட் கோலியை விட ஜோ ரூட் அதிக ரன்கள் அடித்துள்ளார்; அதிக பேட்டிங் சராசரி வைத்துள்ளார்; மேலும், அதிக சதங்கள் மற்றும் அரை சதங்கள் அடித்துள்ளார். இவற்றை சுட்டிக்காட்டி இருக்கும் மைக்கேல் வாகன் "காலை வணக்கம் இந்தியா" என இந்திய ரசிகர்களை சீண்டும் வகையில் அந்த பதிவை புகைப்படமாக வெளியிட்டு இருந்தார்.

அதைப் பார்த்த விராட் கோலி ரசிகர்கள் ட்விட்டரில் கொந்தளித்து வருகின்றனர். அவருக்கு கடும் பதிலடி கொடுத்து வருகின்றனர். ஜோ ரூட் 12131 டெஸ்ட் ரன்கள் குவித்துள்ளார். ஆனால், விராட் கோலி 8848 ரன்கள் மட்டுமே குவித்து இருக்கிறார். ஜோ ரூட் 33 டெஸ்ட் சதங்கள் அடித்துள்ள நிலையில், விராட் கோலி 29 டெஸ்ட் சதங்கள் மட்டுமே அடித்து இருக்கிறார். அதே போல விராட் கோலி 30 டெஸ்ட் அரைசதங்கள் மட்டுமே அடித்து இருக்கிறார். ஆனால், ஜோ ரூட் 64 டெஸ்ட் அரை சதங்கள் அடித்து இருக்கிறார் என மைக்கேல் வாகன் சில ஒப்பீடுகளை குறிப்பிட்டு காட்டி இருந்தார்.

அதற்கு பதிலடி அளித்த கோலி ரசிகர்கள், ஜோ ரூட் இங்கிலாந்தில் மட்டுமே அதிக ரன்கள் மற்றும் அதிக சதங்கள் அடித்துள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளனர். இது பற்றி, விராட் கோலி ரசிகர் ஒருவர் அளித்துள்ள பதிலடி பதிவில், வெளிநாடுகளில் ஜோ ரூட் 33 போட்டிகளில் 13 சதங்கள் அடித்து இருக்கிறார். விராட் கோலி வெளிநாடுகளில் 29 போட்டிகளில் 15 சதங்கள் அடித்திருக்கிறார் என ஒப்பிட்டுக் காட்டி இருக்கிறார்.

மற்றொரு ரசிகர், ஜோ ரூட்டின் 70 சதவீத சதங்கள் அவரது சொந்த நாடான இங்கிலாந்து மண்ணில் வந்தது எனவும், ஜோ ரூட் ஆஸ்திரேலியாவில் இதுவரை ஒரு சதம் கூட அடித்ததில்லை எனவும் சுட்டிக் காட்டி இருக்கிறார். மற்றொரு ரசிகர், விராட் கோலி ஆஸ்திரேலிய மண்ணில் ஆறு சதங்கள் அடித்திருக்கிறார் எனவும், ஜோ ரூட் ஆஸ்திரேலியாவில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை எனவும் கூறியதோடு, "முதலில் ஜோ ரூட்டை ஆஸ்திரேலியாவில் சதம் அடிக்க சொல்லுங்கள், அதன் பின் நாம் இருவரையும் ஒப்பிடலாம்." என மைக்கேல் வாகனுக்கு கடுமையான பதிலடி அளித்திருக்கிறார்.

ஒரு விராட் கோலி ரசிகர், ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்திருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்தமாக விராட் கோலி சர்வதேச அரங்கில் 80 சதங்கள் அடித்து இருக்கிறார். ஆனால், ஜோ ரூட் 48 சர்வதேச சதங்கள் மட்டுமே அடித்து இருக்கிறார் என சுட்டிக்காட்டி இருக்கிறார். ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் தான் சதம் அடிப்பார். ஆனால் விராட் கோலி அனைத்து விதமான போட்டிகளிலும் சிறப்பாக ஆடி வருகிறார் என சுட்டிக்காட்டி இருக்கிறார்.

Story first published: Saturday, August 31, 2024, 13:44 [IST]
Other articles published on Aug 31, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+