Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

30 கோடி பேர் 'கண்காணிப்பில் ' நாளை இந்தியா-பாகிஸ்தான் மோதல்! நாடெங்கும் கிரிக்கெட் ஜுரம்!!

அடிலெய்டு: டோணி தலைமையிலான இந்தியா தொடக்க ஆட்டத்தில் நாளை (பிப்ரவரி 15) பாகிஸ்தானை எதிர் கொள்கிறது. இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது. ஆஸ்திரேலியாவில் 2 மாதங்களுக்கு மேல் விளையாடி வரும் இந்திய அணி ஒரே ஒரு வெற்றியை மட்டுமே (ஆப்கானிஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில்) பெற்றுள்ளது.

இதனால் உலககோப்பையில் நெருக்கடியுடன் ஆட வேண்டிய நிலை உள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய வீரர்கள் பாகிஸ்தானுடனான போட்டியில் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது.

வலுவான பேட்டிங் அவசியம்

வலுவான பேட்டிங் அவசியம்

இந்தியாவிடமுள்ள, பலவீனமான பந்துவீச்சை ஈடுசெய்ய பேட்டிங் வரிசை சிறப்பாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. பாகிஸ்தானை வீழ்த்தினால் இந்திய அணிக்கு இந்த உலக கோப்பையில் அது மிகப்பெரிய மன தைரியத்தை தரும் என்கின்றனர் கிரிக்கெட் வல்லுநர்கள்.

வரலாறு கிடையாது

வரலாறு கிடையாது

இதுவரை பாகிஸ்தானிடம் இந்திய அணி உலக கோப்பை போட்டிகளின்போது தோற்ற வரலாறு கிடையாது. எனவே, பாகிஸ்தான் அணி இந்த முறையாவது உலககோப்பையில் இந்தியாவை வீழ்த்தி பதிலடி கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளது. 2 பயிற்சி ஆட்டத்திலும் வென்றதால் (வங்காளதேசம், இங்கிலாந்து) அந்த அணிகள் நம்பிக்கையுடன் உள்ளது.

பாகிஸ்தான் வலுவாக உள்ளது

பாகிஸ்தான் வலுவாக உள்ளது

கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் பேட்டிங்கில் நல்ல நிலைக்கு திரும்பி உள்ளார். ஷேசாத், யூனுஸ்கான், ஆல்ரவுண்டர் அப்ரிடி, கமரன் அக்மல், சோகைல், வகாப் ரியாஸ், முகமது இர்பான் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

30 கோடி ரசிகர்கள்

30 கோடி ரசிகர்கள்

இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் கிரிக்கெட் மற்றும் தூர்தர்ஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த போட்டியை 30 கோடி பேர் தொலைக்காட்சிகளில் பார்க்க வாய்ப்புள்ளதாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியாவுக்கான தலைமை செயல் அலுவலர் சஞ்சய் குப்தா தெரிவித்துள்ளார். இந்தியா-இலங்கை நடுவேயான கடந்த உலக கோப்பை இறுதி போட்டியை 40 கோடி பேர் தொலைக்காட்சியில் பார்த்த நிலையில், அந்த சாதனை முறியடிக்கப்படவும் வாய்ப்புள்ளதாம்.

இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

டோணி (கேப்டன்), ரோஹித் ஷர்மா, தவான், விராட் கோஹ்லி, ரெய்னா, ரகானே, ஜடேஜா, அஸ்வின், மோகித் ஷர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், அம்பட்டி ராயுடு, ஸ்டூவர்ட் பின்னி, புவனேஸ்வர்குமார், அக்‌ஷர் பட்டேல்.

பாகிஸ்தான் அணி விவரம்

பாகிஸ்தான் அணி விவரம்

மிஸ்பா-உல்-ஹக் (கேப்டன்), ஷேசாத், ஜாம்ஷெட், யூனுஸ்கான், ஹாரிஸ் சோகைல், உமர் அக்மல், சோயிப் மசூத், அப்ரிடி, வகாப் ரியாஸ், முகமது இர்பான், யாசிர் ஷா, ஆதில், சோகைல் கான், சர்பிராஸ் அகமது, ரகத் அலி.

Story first published: Saturday, February 14, 2015, 18:23 [IST]
Other articles published on Feb 14, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+