Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிசிசிஐ காட்டிய பாரபட்சம்.. தென்னாப்பிரிக்க தொடரில் கிளம்பிய சர்ச்சை.. போர்க்கொடி தூக்கும் ரசிகர்கள்

மும்பை: தென்னாப்பிரிக்க தொடரில் பிசிசிஐ பாரபட்சம் காட்டியதாக ரசிகர்கள் மிக மோசமாக விமர்சித்து வருகின்றனர்.

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 5போட்டிகள் கொண்ட தொடர் சமனில் முடிவடைந்தது.

இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில், கடைசி போட்டி ரத்து செய்யப்பட்டது.

5வது டி20 ரத்து

5வது டி20 ரத்து

5வது டி20 போட்டி நடைபெற்ற பெங்களூரு நகரத்தில் நேற்று மாலை திடீரென மழை பெய்ய தொடங்கியது. நீண்ட நேரமாக பெய்து வந்த மழையினால், ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 3.3 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 28 ரன்களை எடுத்த போதே போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பாரபட்சம் பார்த்ததா?

பாரபட்சம் பார்த்ததா?

இந்நிலையில் பிசிசிஐ பாரபட்சம் காட்டியதாக ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். ஐபிஎல் தொடரின் முக்கியமான ப்ளே ஆஃப் போட்டிகள் மழையினால் பாதிக்கப்பட்டால், இரவு 11.45 மணிக்கு கூட 5 ஓவர்கள் போட்டியாக மாற்றி நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்தது. ஆனால் நேற்று இதுகுறித்து அதிகாரிகள் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை.

காரணம் என்ன

காரணம் என்ன

உள்நாட்டு தொடரின் முடிவை தெரிந்துக்கொள்வதற்காக நடு இரவு வரை நேரத்தை மாற்றும் பிசிசிஐ, விறுவிறுப்பு கட்டத்தில் இருக்கும் ஒரு முக்கியமான தொடருக்காக ஏன் நேரத்தை மாற்றவில்லை. இதற்கு என்ன காரணம். இனி சர்வதேச கிரிக்கெட் என்பதே பிசிசிஐ-க்கு வேண்டாமா?, ஐபிஎல் ஒன்றே போதும் என நினைத்துவிட்டதா என ரசிகர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்னர்.

Recommended Video

India அணியோடு Ireland செல்லும் Chetan Sharma ஏன் தெரியுமா? | *Cricket
மற்றொரு பிரச்சினை

மற்றொரு பிரச்சினை

இதுஒருபுறம் இருக்க, மற்றொரு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அதாவது போட்டி நடைபெற்ற் பெங்களூரு சின்னசாமி மைதானத்தின் மேற்கூரை மிக மோசமாக இருந்ததால், மழை நேராக பார்வையாளர்கள் மீதே விழுந்தது. பணக்கார கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ, ஒரு நல்ல கிரிக்கெட் மைதானத்தை கூட வைத்துக்கொள்ளவில்லை என விமர்சித்து வருகின்றனர்.

Story first published: Monday, June 20, 2022, 18:41 [IST]
Other articles published on Jun 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+