Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சினை அவமரியாதையுடன் பேசிய ஆஸி, வீரர்.. அதுவும் பொதுவெளியில்.. கொதித்தெழுந்த ரசிகர்கள்!

மும்பை: சச்சின் டெண்டுல்கர் குறித்து அவமரியாதையாக ட்வீட் செய்த ஆஸ்திரேலிய வீரரை இந்திய ரசிகர்கள் கடும் கோபத்துடன் விளாசி வருகின்றனர்.

உலகப் புகழ்பெற்ற காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பிர்மிங்கம் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் 24 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் போட்டி இணைக்கப்பட்டுள்ளது.

காமன்வெல்த் போட்டி

காமன்வெல்த் போட்டி

கடைசியாக கடந்த 1998ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் கிரிக்கெட் இடம்பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது தான் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியாக இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

சச்சினின் வாழ்த்து

சச்சினின் வாழ்த்து

இந்நிலையில் இந்த போட்டிக்காக சச்சின் கூறிய வாழ்த்தில் தான் சர்ச்சை கிளம்பியுள்ளது. இதுகுறித்து ட்வீட் செய்திருந்த சச்சின், காமன்வெல்த்-ல் கிரிக்கெட்டை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்திய மகளிர் அணிக்கு தொடர் வெற்றிகளை பெற வாழ்த்துக்கள் என பதிவிட்டிருந்தார்.

அவமதிப்பான பேச்சு

அவமதிப்பான பேச்சு

இந்த ட்வீட்டிற்கு ரிப்ளை செய்திருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மார்னஸ்மார்னஸ் லாபஸ்சாக்னே, "ஒப்புக்கொள்கிறேன் சச்சின், இந்தியா vs ஆஸ்திரேலிய அணிகள் முதல் போட்டியிலேயே மோதுவது கூடுதல் சிறப்பு எனத்தெரிவித்திருந்தார். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினுக்கு மரியாதை கொடுக்காமல் சச்சின் என அழைத்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விளாசி வரும் ரசிகர்கள்

விளாசி வரும் ரசிகர்கள்

இதனால் கோபமடைந்த அவர்கள், மரியாதை என்றால் கற்றுக்கொள்ளுங்கள் மார்னஸ், சச்சின் கிரிக்கெட்டின் கடவுளாக பார்க்கப்படுபவர். அவர் அறிமுகம் ஆகும் போது, நீங்கள் குழந்தையாக இருந்திருப்பீர்கள். அப்படிபட்ட சச்சினை இந்திய வீரர்கள் எவரும் மரியாதை இன்றி பேசியது கிடையாது. ஆனால் நீங்கள் அவமதித்துள்ளீர்கள் எனக்கூறி மோசமான விமர்சனங்களை செய்து வருகின்றனர்.

அப்படி யார் அவர்?

அப்படி யார் அவர்?

28 வயது மட்டுமே ஆகும் மார்னஸ் லாபஸ்சாக்னே தற்போது தான் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டராக வளர்ந்து வருகிறார். இவர் இதுவரை 21 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 677 ரன்களும், ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாடி 2 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, July 30, 2022, 19:16 [IST]
Other articles published on Jul 30, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+