Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

211 கிமீ வேகத்தில் பந்துவீச்சு.. ரசிகர்களை வாயடைக்க செய்த ஹசன் அலி.. இணையத்தை தெறிக்கவிடும் வீடியோ!

தாக்கா: வங்கதேச வீரர் ஹசன் அலி, மணிக்கு 211 கிமீ வேகத்தில் பந்துவீசிய வீடியோ இணையத்தில் வைரலாகி ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் முடிவடைந்ததை அடுத்து பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் மோதி வருகிறது.

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, அங்கு தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.

முதல் போட்டி

முதல் போட்டி

இரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி சமீபத்தில் பங்களா தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 127 ரன்கள் எடுத்தது. எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்புக்கு 132 ரன்களை குவித்து அபார வெற்றி பெற்றுள்ளது.

 அசுர வேகம்

அசுர வேகம்

இந்நிலையில் இந்த போட்டியின் போது நடந்த சம்பவம் ஒன்று ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆட்டத்தின் 2வது ஓவரில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் வீசிய பந்து மணிக்கு 211 கிமீ வேகத்தில் போடப்பட்டதாக தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. ஒரு மனிதரால் எப்படி இவ்வளவு வேகமாக பந்துவீச முடியும் எனா ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். ஹசன் அலியின் ரசிகர்களும் அது குறித்த வீடியோவை பகிர்ந்து கொண்டாடி வந்தனர்.

கோளாறு

கோளாறு

ஆனால் அது உண்மையில்லை. ஆட்டத்தின் போது ஏற்பட்ட சிறிய தொழில்நுட்ப கோளாறு காரணமாக பந்தின் வேகம் அதிகமாக காண்பிக்கப்பட்டுவிட்டதாகவும், அது பின்னர் சரிசெய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. இதே போல சுழற்பந்துவீச்சாளர் முகமது நவாஸ் வீசிய பந்து ஒன்று 148 கிமீ வேகத்தில் வந்ததாக காண்பிக்கப்பட்டதும் வைரலாகி வருகிறது. நான்கே நான்கு அடி எடுத்து வைத்து பந்துவீசினால் இவ்வளவு வேகம் இருக்குமா என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Recommended Video

Abu Dhabi T10 League 2021: 5 Indians will play in this Event | OneIndia Tamil
சோயிப்பின் வேகம்

சோயிப்பின் வேகம்

சர்வதேச அரங்கில் தற்போது வரை பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் வீசிய பந்தே அதிவேக ஒன்றாக இன்று வரை கருதப்படுகிறது. கடந்த 2003ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் போது விளையாடிய சோயிப் அக்தர், இங்கிலாந்துக்கு எதிராக மணிக்கு 161.3 கிமீ வேகத்தில் பவுலிங் போட்டார். அதுதான் இன்று வரை அதிகபட்ச வேகமாக பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, November 20, 2021, 15:21 [IST]
Other articles published on Nov 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+