Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாக். செய்தியாளருக்கு ஆதரவு தந்த பிசிசிஐ.. அதுவும் இந்தியாவை இழிவாக பேசியதற்கு..கொந்தளித்த ரசிகர்கள்

மும்பை: இந்தியா குறித்து மிக கேவலமாக பேசிய பாகிஸ்தான் பத்திரிகையாளருக்கு பிசிசிஐ-யே ஆதரவுக் கொடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் உலகில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்ட அறிவிப்பு தான் பேசுப்பொருளாக இருந்து வருகிறது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவும் உள்ள ஜெய் ஷா, ஆசிய கோப்பை தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது எனத் தெரிவித்தார்.

ஜெய் ஷாவின் அறிவிப்பு

ஜெய் ஷாவின் அறிவிப்பு

அதாவது 2023ம் ஆண்டு ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் தான் நடைபெறவுள்ளது. இதற்காக இந்திய அணி, பாகிஸ்தானுக்கு செல்லாது என்றும், ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தானில் இருந்து வேறுநாட்டிற்கு மாற்றவுள்ளதாகவும் ஜெய் ஷா அறிவித்தார். இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெரும் அதிர்ச்சியடைந்தது.

பாகிஸ்தான் அறிக்கை

பாகிஸ்தான் அறிக்கை

பிசிசிஐ-ன் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 2023ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பைக்காக பாகிஸ்தான் செல்லாது என எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கு பாகிஸ்தானின் பத்திரிகையாளர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மோசமான ட்வீட்

மோசமான ட்வீட்

இந்நிலையில் அதற்கு பிசிசிஐ-யே ஆதரவு தந்தது போன்று சர்ச்சை கிளம்பியுள்ளது. அதாவது பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர், ட்விட்டரில், " இந்தியா எனும் கோழையே.. புற முதுகை காட்டி ஓடாதீர்கள்.. விளையாட்டை அரசியல் ரீதியாக பார்ப்பதை முதலில் நிறுத்துங்கள் என கடுமையான விமர்சனத்தை பதிவிட்டிருந்தார்.

ரசிகர்கள் கொந்தளிப்பு

ரசிகர்கள் கொந்தளிப்பு

அவரின் இந்த ட்வீட்டை இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் லைக் செய்துள்ளது. இந்தியாவை பற்றி அவதூராக பேசும் ஒருவரின் ட்வீட்டை பிசிசிஐ-யே எப்படி லைக் செய்து ஆதரவு கொடுக்கலாம் என ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். மேலும் பிசிசிஐ-க்கு எதிராக கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர்.

Story first published: Thursday, October 20, 2022, 19:15 [IST]
Other articles published on Oct 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+