
இந்திய பேட்டிங் வரிசை
பேட்டிங்கை பொறுத்தவரையில் கேப்டன் ரோகித் சர்மா, துணைக்கேப்டன் கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் என சிறப்பான வரிசையை மேற்கொண்டுள்ளனர். பேக் அப் வீரராக ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.

பலவீனமான பவுலிங் படை
இந்நிலையில் பந்துவீச்சில் தான் இந்திய அணி பலவீனமாக தெரிகிறது. சுழற்பந்துவீச்சில் அஸ்வின், ஜடேஜா, யுவேந்திர சாஹல், ரவி பிஷ்னாய் என அனுபவ வீரர்களை தேர்வு செய்துள்ளனர். ஆனால் வேகப்பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஆவேஷ் கான் என இரண்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர். இவர்களுக்கு உறுதுணையாக புவனேஷ்வர் குமார் மட்டுமே இருக்கிறார்.

பும்ரா ஏன் இல்லை?
முன்னணி வீரர்களான ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் காயம் காரணமாக அணியில் தேர்வு செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. ஆசியக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் அழுத்தமான சூழல்களை எதிர்கொள்வதற்கு அனுபவமே இல்லாத இரண்டு இளம் வீரர்களை எப்படி பிசிசிஐ நம்பியது என ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

ஸ்டார் வீரர்கள் இல்லை
இந்திய அணிக்கு முகமது சிராஜ், முகமது ஷமி, பிரஷித் கிருஷ்ணா போன்ற முன்னணி வீரர்கள் இன்னும் உள்ளனர். ஆனால் அவர்களை புறக்கணித்துவிட்டு பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது. இது இந்திய அணிக்கு எந்த அளவிற்கு பயன்பட போகிறது என்ற அச்சம் தற்போதே ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications