Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதிலுமா சீனியாரிட்டி பார்ப்பீங்க.. 3வது டி20ல் சூர்யகுமார் யாதவுக்கு அநீதி.. ரசிகர்கள் கொந்தளிப்பு!

இந்தூர்: இந்திய அணியில் சூர்யகுமார் யாதவுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்தியா - தென்னாப்பிரிக்க அணியுடனான் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இந்தூரில் தொடங்கியது.

டி20 உலகக்கோப்பைக்கு முன் விளையாடும் கடைசி டி20 போட்டி இதுதான் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

3வது டி20 போட்டி

3வது டி20 போட்டி

3 போட்டிகள் கொண்ட தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்டதால் கடைசி போட்டியில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோருக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. இவர்களுக்கு மாற்றாக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

சீனியாரிட்டி பிரச்சினை

சீனியாரிட்டி பிரச்சினை

இந்நிலையில் இதுதான் பிரச்சினையாக வெடித்துள்ளது. அதாவது தொடர்ச்சியாக அனைத்து போட்டிகளிலும் விளையாடிவரும் சூர்யகுமார் யாதவுக்கு ஓய்வு தரப்பட்டிருக்க வேண்டும். 2வது டி20போட்டியின் போது கூட சூர்யகுமாருக்கு ஓய்வு தரவுள்ளேன் எனவும், இனி உலகக்கோப்பையில் தான் நேரடியாக வருவார் என்றும் ரோகித் சர்மா கூறியிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் கோலி மற்றும் கே.எல்.ராகுலுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது.

ரசிகர்கள் அதிருப்தி

ரசிகர்கள் அதிருப்தி

விராட் கோலி இந்திய அணியின் சீனியர் வீரர் ஆவார். கே.எல்.ராகுல் துணைக்கேப்டனாக உள்ளார். எனவே ஒரு வீரருக்கு ஓய்வு தரவேண்டும் என அறிவித்த பின்னரும், சீனியர்களுக்காக அவரை மீண்டும் களத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். அதிக பணிச்சுமையால் அவரின் ஃபார்ம் குறைந்தால் என்ன ஆவது என ரோகித் சர்மாவை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

காரணம் என்ன

காரணம் என்ன

மற்றொருபுறம் ஆதரவுக்குரலும் எழுந்து வருகிறது. அதாவது போட்டி நடைபெறும் இந்தூர் மைதானத்தில் பவுண்டரி எல்லைகள் மிகவும் குறைந்த தூரத்தில் இருக்கும். வேகப்பந்துவீச்சுக்கும் சாதகமாக இருக்கும். எனவே நல்ல அதிரடி காட்டி வரும் சூர்யகுமார் யாதவ், இங்கு விளையாடினால் நல்ல நம்பிக்கையுடன் இருப்பார் என்பதற்காக ரோகித் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Story first published: Tuesday, October 4, 2022, 19:39 [IST]
Other articles published on Oct 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+