Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இவ்வளவு பெரிய அநீதியா??”.. ஸ்ரேயாஸ் ஐயரின் விக்கெட்டில் புதிய சர்ச்சை.. அம்பயரை விளாசும் ரசிகர்கள்!

ட்ரினிடாட்: 2வது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயரின் விக்கெட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் உடனான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர்களில் 311/6 ரன்களை சேர்க்க, பின்னர் களமிறங்கிய இந்திய அணி 49.4 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி கண்டது.

இந்திய அணி வெற்றி

இந்திய அணி வெற்றி

இந்த போட்டியில் இந்திய அணி 79 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறிய போது, ஸ்ரேயாஸ் ஐயர் - சஞ்சு சாம்சன் ஜோடி தான் காப்பாற்றியது. ஸ்ரேயாஸ் (63 ) சஞ்சு சாம்சன் (54) என இருவருமே அரைசதம் அடிக்க, 4 விக்கெட்டிற்கு 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இவர்களின் பார்ட்னர்ஷிப் மட்டும் பிரியாமல் இருந்திருந்தால், வெற்றி சுலபமாக கிடைத்திருக்கும்.

அம்பயரிங் சர்ச்சை

அம்பயரிங் சர்ச்சை

இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயரின் விக்கெட்டில் அம்பயர் மிகவும் மோசமான தவறை செய்தது தெரியவந்துள்ளது. அல்சாரி ஜோசஃப் லெக் சைடில் வீசிய ஃபுல் லெந்த் பந்தை, ஸ்ரேயாஸ் பின் திசையில் அடிக்க முயன்றார். ஆனால் துரதிஷ்டவசமாக எல்.பி.டபள்யூ அவுட்டானார். ஆனால் அங்கு எல்.பி.டபள்யூ ஆகவே இல்லை என வீடியோ வெளியாகியுள்ளது.

ஆதாரம்

ஆதாரம்

அவுட் இல்லை என்பதில் உறுதியாக இருந்த ஸ்ரேயாஸ் 3வது நடுவருக்கு பரிந்துரைத்தார். அவர் நினைத்தபடியே அந்த பந்து லெக் ஸ்டம்பிற்கு வெளியே தான் சென்றது. ஆனால் ஸ்டம்பில் உரசுவது போன்று உள்ளது என கூறி 'அம்பயர்ஸ் கால்' எனக் கொடுத்தனர். இதனால் முதலில் எடுத்த முடிவின் படி அவுட் கொடுக்கப்பட்டார்.

ஸ்ரேயாஸ் அதிருப்தி

ஸ்ரேயாஸ் அதிருப்தி

இதுகுறித்து பேசியிருந்த ஸ்ரேயாஸ் ஐயர், நான் அவுட்டான முறையை என்னால் ஒப்புக்கொள்ளவே முடியவில்லை. அடுத்த போட்டியில் நிச்சயம் சதமடித்து காட்டுவேன் எனக் கூறினார். 71 பந்துகளை சந்தித்த ஸ்ரேயாஸ் ஐயர் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 63 ரன்களை சேர்த்தார். இந்த தொடரில் அவர் அடிக்கும் 2வது அரைசதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, July 25, 2022, 14:48 [IST]
Other articles published on Jul 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+