
2வது பயிற்சி போட்டி
ஐசிசி ஏற்பாடு செய்த பயிற்சி போட்டிகள் மட்டுமல்லாது, இந்திய அணி ஸ்பெஷலாக ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு அணிகளுடனும் மோதி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சூழலில் இரு அணிகளும் மோதும் இரண்டாவது போட்டி இன்று தொடங்கியது.

ரோகித்தின் முடிவு
இந்த போட்டிக்கான ப்ளேயிங் 11ல் மீண்டும் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியிலும் இவர்கள் விளையாடவில்லை. சிறிய அணி தான் என்ற நினைப்பில் அசால்ட்டாக விட்டனர். ஆனால் வெறும் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் அளவிற்கு சவால் கொடுத்தனர்.

ரசிகர்களின் அதிருப்தி
வலைப்பயிற்சியில் ஈடுபவதை விட இது போன்ற போட்டிகளில் விளையாடுவதால் நம்பிக்கை அதிகரிக்கும். ஆனால் கோலி, சூர்யகுமாருக்கு ஓய்வு தந்து வருகின்றனர். இந்திய அணியில் தற்போது நல்ல ஃபார்மில் இருப்பது இவர்கள் இரண்டு பேர் தான். எனவே இவர்களை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ரசிகர்கள் கோரி வருகின்றனர்.

முக்கிய ஆட்டங்கள்
இந்திய அணி அடுத்ததாக வரும் அக் 16ம் தேதி ஆஸ்திரேலியா அணியுடனும், அக்டோபர் 18ம் தேதியன்று நியூசிலாந்து அணியுடனும் பயிற்சி போட்டிகளில் மோதவிருக்கிறது. இந்த இரண்டு போட்டிகளில் நேரடியாக விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











