Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ச்ச என்னா மனுஷன்யா.. நாடு தான் முக்கியம் என எடுத்த முடிவு..நெருங்கிய உறவு உயிரிழந்த போதும் இப்படியா

ராஞ்சி: தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் எடுத்துள்ள ஒரு முடிவு ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் தென்னாப்பிரிக்காவின் தூணாக விளங்கி வரும் டேவிட் மில்லர் இன்று காலை ஒரு சோக செய்தியை வெளியிட்டார்.

டேவிட் மில்லர் அறிவிப்பு

டேவிட் மில்லர் அறிவிப்பு

அதாவது டேவிட் மில்லரின் குழந்தை உயிரிழந்துவிட்டார் எனத் தகவல் வெளியானது. குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட டேவிட் மில்லர், உன்னை பிரிந்து இனி எப்படி இருக்கப்போகிறேன் எனத் தெரியவில்லை. நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த உள்ளம் நீதான். எப்படிப்பட்ட காலத்தையும் சிரித்துக்கொண்டே சமாளிக்க வேண்டும் என்பதை உன்னிடம் இருந்து கற்றுக்கொண்டுள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

எப்படி உயிரிழந்தார்?

எப்படி உயிரிழந்தார்?

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நீண்ட போராட்டத்திற்கு பிறகு நேற்று உயிரிழந்தார். இதனையடுத்து அவரின் இறுதி சடங்குகளுக்காக டேவிட் மில்லர் இன்று தென்னாப்பிரிக்காவுக்கு புறப்படவுள்ளார் என்று தகவல்கள் பரவின. இன்று இந்தியா - தென்னாப்பிரிக்கா 2வது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ள சூழலில் இது பின்னடைவாக பார்க்கப்பட்டது.

உண்மை விவரங்கள்

உண்மை விவரங்கள்

இந்நிலையில் அவை அனைத்தும் வதந்திகள் என கூறப்பட்டுள்ளன. உயிரிழந்த குழந்தை டேவிட் மில்லரின் மகள் இல்லை, அவர் டேவிட் மில்லரின் தீவிர ரசிகை எனக் கூறப்பட்டுள்ளது. இதே போல 2வது ஒருநாள் போட்டியில் விளையாடி கொடுத்துவிட்டு தான் இறுதி சடங்கிற்கு செல்வது குறித்து முடிவெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி விவரங்கள்

போட்டி விவரங்கள்

இரு அணிகளும் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று மதியம் 1 மணிக்கு ராஞ்சியில் உள்ள மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்த தொடரில் தென்னாப்பிரிக்க அணி முதல் போட்டியில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. எனவே இன்றைய போட்டியில் இந்திய அணி கம்பேக் கொடுக்க வேண்டிய சூழலில் உள்ளது.

Story first published: Sunday, October 9, 2022, 15:04 [IST]
Other articles published on Oct 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+