சிக்கலில் மாட்டிய பிசிசிஐ.. சஞ்சு சாம்சன் இந்திய கேப்டனானது எப்படி??.. ரசிகர்களின் பவர் இதுதானோ!
மும்பை: சஞ்சு சாம்சனுக்காக ரசிகர்கள் விரித்த வலையில் பிசிசிஐ வேறு வழியே இன்றி மாட்டிக்கொண்டுள்ளது.
Recommended Video
டி20 உலகக்கோப்பை தொடருக்காக ரோகித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
முன்னணி வீரர்கள் பலரும் வாய்ப்பு பெற்ற போதும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

சஞ்சு சாம்சன் புறகணிப்பு
ஆஸ்திரேலிய களத்தில் பந்துகள் அதிக வேகமாகவும், அதிக பவுன்ஸர்களுடனும் வரக்கூடிய தன்மை உள்ளது. அப்படிபட்ட களங்களை அசால்ட்டாக எதிர்கொள்ளக்கூடியவர் தான் சஞ்சு சாம்சன். ஆஸ்திரேலிய களத்தில் சஞ்சு சாம்சனை விட சிறப்பாக விளையாடக்கூடிய வீரர் இல்லவே இல்லை என ரவி சாஸ்திரியே கூறியுள்ளார். அப்படி இருந்தும் அவர் ஒதுக்கப்பட்டார்.

போராட்டம் அறிவிப்பு
திறமைகள் உள்ள போதும், சஞ்சு சாம்சன் மட்டும் வேண்டுமென்றே ஒதுக்கப்படுவதாக கொதித்த அவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கண்டனங்களை பதிவிட்டனர். மேலும் வரும் 28ம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ள இந்தியா - தென்னாப்பிரிக்க டி20 போட்டியின் போது, மைதானத்திலேயே போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்தனர்.

பிசிசிஐ-ன் முடிவு
இந்த போராட்ட அறிவிப்பு பிசிசிஐ பெரும் தலைவலியை உண்டாக்கியது. இதில் இருந்து தப்பிப்பதற்கு வேறு வழியே இன்றி தவித்து வந்த பிசிசிஐ, தற்போது புதிய ரூட்டை பிடித்துள்ளது. அதாவது நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

என்ன தொடர் இது?
இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ அணிகளுக்கு இடையே 3 டெஸ்ட் மற்றும் 3 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. 3வது டெஸ்ட் போட்டி தற்போது சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் வரும் 22, 25,27 தேதிகளில் ஒருநாள் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.


Click it and Unblock the Notifications