Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திரும்ப திரும்ப சொதப்பும் பிரித்வி ஷா... தொடர்ந்து 10வது போட்டி சொதப்பல்... ரசிகர்கள் கேள்வி

அடிலெய்ட் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பகலிரவு போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய பிரித்வி ஷா டக் அவுட் ஆகியுள்ளார்.

தொடர்ந்து தனது 10வது போட்டியில் அவர் சொதப்பியுள்ளது ரசிகர்களிடையே கேள்வியை எழுப்பியுள்ளது.

சுப்மன் கில்லிற்கு பதிலாக அவர்மீது அணி நிர்வாகம் மற்றும் கேப்டன் விராட் கோலி அதிகமான நம்பிக்கை வைத்திருப்பது ஏன் என்ற கேள்வியை அவர்கள் எழுப்பியுள்ளனர்.

சர்வதேச போட்டிகள்

சர்வதேச போட்டிகள்

சர்வதேச கிரிக்கெட்டில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக தனது முதல் போட்டியை துவங்கிய பிரித்வி ஷா அந்த போட்டியில் சதமடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார். தொடர்ந்து ரஞ்சி மற்றும் முஸ்தாக் அலி உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளிலும் அவர் சிறப்பாகவே விளையாடினார். இதையடுத்து சர்வதேச டெஸ்ட் தொடர்களில் அவர் பெயர் இடம்பெற்று வருகிறது.

சொதப்பும் பிரித்வி ஷா

சொதப்பும் பிரித்வி ஷா

இந்நிலையில் சமீப காலங்களில் சர்வதேச போட்டிகளில் அவரது செயல்பாடு சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை என்றே கூற வேண்டும். கடந்த ஐபிஎல் போட்டிகளிலும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக களமிறங்கிய பிரித்வி 13 போட்டிகளில் விளையாடி 228 ரன்களை எடுத்திருந்தார்.

டக் அவுட் ஆன பிரித்வி

டக் அவுட் ஆன பிரித்வி

இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ள ஷா, இன்றைய பகலிரவு போட்டியில் துவக்க வீரராக களமிறங்கி இரண்டு பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு டக் அவுட் ஆகி பெவிலியனுக்கு திரும்பினார்.

பேட் -பேட் இடைவெளி

பேட் -பேட் இடைவெளி

மிட்செல் ஸ்டார்க்கின் பந்தில் அவர் அவுட்டானார். இந்நிலையில் அவர் பேட்டிற்கும் பேடிற்கும் இடையில் அதிக இடைவெளி விடுவதாகவும் அதனால்தான் அவரை ஆஸ்திரேலிய அணி எளிதாக வீழ்த்த முடிவதாகவும் ஐபிஎல்லில் அவருக்கு பயிற்சி அளித்த ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

பொய்யாக்கிய ஷா

பொய்யாக்கிய ஷா

இதே கருத்தையே முன்னாள் இந்திய கேப்டன் கவாஸ்கரும் தெரிவித்துள்ளார். சுப்மன் கில்லிற்கு பதிலாக இந்திய தேர்வாளர்கள் மற்றும் கேப்டன் விராட் கோலி ஷா மீது நம்பிக்கை வைத்து அவரை தேர்வு செய்துள்ள நிலையில், அவர்களின் நம்பிக்கையை ஷா பொய்யாக்கியுள்ளார்.

ரசிகர்கள் கேள்வி

ரசிகர்கள் கேள்வி

இந்நிலையில் கடந்த 10 போட்டிகளில் பிரித்வி ஷா அடித்துள்ள ரன்களை குறிப்பிட்டு அவர்மீது அதிகப்படியான நம்பிக்கை வைக்கப்படுவதன் அவசியம் என்ன என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கடந்த 10 போட்டிகளில் 0, 0, 7, 10, 9, 0, 0, 19, 40 மற்றும் 3 ரன்களை மட்டுமே அவர் எடுத்துள்ளார்.

ரசிகர்கள் கலாய்

ரசிகர்கள் கலாய்

முன்னதாக சச்சின், ஷேவாக் மற்றும் லாராவை பிரித்வி ஷாவிடம் காண்பதாக கோச் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ள நிலையில் இவர்கள் மூவரையும் ஒரே பந்தில் தான் வீழ்த்தியுள்ளேனா என்று ஸ்டார்க் கேள்வி எழுப்பும்படியும் ரசிகர்கள் ஒருவர் ஷாவை கலாய்த்துள்ளார்.

பொய்யாக்கிய பிரித்வி

பொய்யாக்கிய பிரித்வி

இளம் வீரர் ஷாவின் திறமையை ஒருசில போட்டிகளில் மட்டுமே தீர்மானிக்கக் கூடாது என்றும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும் என்றும் முன்னதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்திருந்தார். தொடர்ந்து அவர் சொதப்பினாலும் அவருக்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறார். ஆனால் அவரது நம்பிக்கையை பொய்த்து வருகிறார் ஷா.

Story first published: Thursday, December 17, 2020, 16:57 [IST]
Other articles published on Dec 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+