Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நடாஷா ஸ்டான்கோவிக் உடனான பிரிவுக்கு இதுதான் காரணமா.. ஹர்திக் பாண்டியாவை பொளந்து கட்டும் ரசிகர்கள்!

மும்பை: இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் செர்பியாவைச் சேர்ந்த மாடலும், நடிகையுமான நடாஷா ஸ்டான்கோவிக் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். 2020ஆம் ஆண்டு இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், அடுத்த சில மாதங்களில் ஆண் குழந்தை பிறந்தது.

ஹர்திக் பாண்டியா உடனான திருமணத்திற்கு பின் நடாஷா ஸ்டான்கோவிக் நடிப்பை நிறுத்தி கொண்டார். இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் ட்ரெண்டிங்கில் இடம்பிடிக்க, இந்தியாவின் நட்சத்திர தம்பதிகளில் ஒருவராக மாறினர். அதேபோல் இன்னொரு பக்கம் ஹர்திக் பாண்டியாவும் கிரிக்கெட்டில் உச்சக்கட்ட வளர்ச்சியில் இருந்தார்.

ipl 2025 Hardik Pandya

இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் போது ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவாக நடாஷா ஸ்டான்கோவிக் ஒருமுறை கூட மைதானத்திற்கு நேரில் வரவில்லை. அதேபோல் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பெயரில் இருந்தும் நடாஷா ஸ்டான்கோவிக், ஹர்திக் பாண்டியாவின் பெயரை நீக்கி இருந்தார். இதனால் இருவரும் பிரிந்துவிட்டார்களா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக ஹர்திக் பாண்டியா, நடாஷா ஸ்டான்கோவிக் இருவருமே அமைதி காத்து வந்தனர். தொடர்ந்து டி20 உலகக்கோப்பை வென்ற பின் ஹர்திக் பாண்டியா நாடு திரும்பிய பின், தனது மகன் அகஸ்தியாவை சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதன்பின் நடாஷா ஸ்டான்கோவிக் தனது மகனுடன் செர்பியாவுக்கு திரும்பினார்.

அன்றைய நாளிலேயே ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிக் இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்தனர். இந்த பிரிவுக்கான காரணம் குறித்து எந்த விஷயமும் வெளிவரவில்லை. இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா தனது விடுமுறையை பிரிட்டனைச் சேர்ந்த நடிகையும், பாடகியுமான ஜாஸ்வின் வாலியாவுடன் கொண்டாடி வருகின்றனர்.

இவர்கள் இருவரும் டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஜாஸ்மின் வாலியாவின் அனைத்து இன்ஸ்டா புகைப்படங்களுக்கும் ஹர்திக் பாண்டியா லைக் செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவில் அதிகளவு பிரபலமில்லாத ஜாஸ்மின் வாலியாவை ஹர்திக் பாண்டியா பின் தொடர்வதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதனால் நடாஷா ஸ்டான்கோவிக் பிரிந்து செல்வதற்கு ஹர்திக் பாண்டியா தான் காரணம் என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர். ஏனென்றால் ஜூலை 18ஆம் தேதி ஹர்திக் பாண்டியா - நடாஷா ஸ்டான்கோவிக் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு மாதம் கூட முழுமையாக முடியாத சூழலில், ஹர்திக் பாண்டியா அடுத்த காதலுக்கு தயாராகி இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Story first published: Wednesday, August 14, 2024, 9:28 [IST]
Other articles published on Aug 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+