IPL Closing ceremony - மழை வேற வர மாதிரி இருக்கு.. இந்த பாட்டு தேவையா கோபி.. கடுப்பான ரசிகர்கள்
அகமதாபாத் : ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு இறுதிப் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் வார்ம் ஆப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நேற்று மழையால் ஆட்டம் நடைபெறாத நிலையில், இன்று மழை கொஞ்சம் தயவு காட்டியுள்ளது. ஆனால், 8 மணியிலிருந்து 9 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், அகமதாபாத் அருகே புதிய மழை மேகங்கள் உருவாகி வருவதாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, போட்டி மழையால் பாதிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதே போன்ற கணிப்பை தான், மற்ற வானிலை கண்காணிப்பு தன்னார்வலர்களும் கூறியுள்ளனர்.
நேற்று இரவே திங்கட்கிழமையும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், போட்டியை காலையில் நடத்தலாம் என்று பலரும் கூறியுள்ளனர். காலையில் வெயில் பொழிந்த நிலையில், 40 ஓவரையும் போட்டு முடித்திருக்கலாம் என்று ரசிகர்கள் கூறியுள்ளனர்,
மேலும் நிறைவு விழா என்ற பெயரில் பாலிவுட் பாடகர் கிங் என்றவர் பாடலை பாடினார். ஆனால், மழை வரப் பேகிற நேரத்தில், டாசை போட்டு, ஆட்டத்தை முன்பே நடத்தலாமே ஏன் இந்த தேவை இல்லாத வேலை என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். தற்போது மழை வரும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், டாஸ் வென்ற கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications