For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவரையா டி20 உலககோப்பையில் சேர்க்கல.. சஞ்சு சாம்சனுக்காக களமிறங்கும் ரசிகர்கள்.. யாருக்கு பதில் ?

கான்பூர் : டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனை சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் போர் கொடி தூக்கியுள்ளனர்.

சஞ்சு சாம்சன் கடந்த 6 மாதமாக டி20 போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்று தனது திறமையை நிரூபித்தார். ஆனால், கேஎல் ராகுலின் வருகையால் சஞ்சு சாம்சனுக்கு இடம் தரப்படவில்லை.

ரிஷப் பண்ட்க்கு தான் முக்கியத்துவம் தொடர்ந்து தரப்படுகிறது. இதனால் சஞ்சு சாம்சன் அதிரடியாக நீக்கப்பட்டார்.

இனி அத யோசிக்கவே கூடாது.. டி20 உலகக்கோப்பையை வெல்வது எப்படி? ரோகித்திற்கு ரவிசாஸ்திரி முக்கிய டிப்ஸ்இனி அத யோசிக்கவே கூடாது.. டி20 உலகக்கோப்பையை வெல்வது எப்படி? ரோகித்திற்கு ரவிசாஸ்திரி முக்கிய டிப்ஸ்

20 ரன்கள்

20 ரன்கள்

இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் தனி ஆளாக நின்று அதிரடியாக விளையாடினார். கடைசி ஓவரில் 30 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. சஞ்சு சாம்சன் ஒரு சிக்சர், 3 பவுண்டரிகளை விளாசி அந்த ஓவரில் 20 ரன்கள் அடித்தார்.

86 ரன்கள்

86 ரன்கள்

சஞ்சு சாம்சன் 63 பந்துகளில் 86 ரன்கள் விளாசினார். சஞ்சு சாம்சனின் ஆட்டத்தை பார்க்கும் போது தோனி எப்படி தனி ஆளாக நின்று அணியின் வெற்றிக்காக போராடுவாரோ, அதே போன்று சஞ்சு சாம்சனும் எதிரணி வீரர்களுக்கு நெருக்கடி தரும் வகையில் விளையாடினார். சஞ்சு சாம்சனின் ஆட்டம் , ஆஸ்திரேலியா போன்ற ஆடுகளங்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும்.

ரிஷப் பண்ட் எதற்கு

ரிஷப் பண்ட் எதற்கு

இதனை ரோகித் சர்மாவே பல முறை கூறி இருக்கிறார். இந்த நிலையில்,சஞ்சு சாம்சனை டி20 உலககோப்பை அணியில் சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ரிஷப் பண்ட், டெஸ்ட் போட்டியில் தனது திறமையை நிரூபித்தாலும், டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் அவர் பெரிய அளவில் சாதிக்கவில்லை.

விமர்சகர்கள் கருத்து

விமர்சகர்கள் கருத்து

இதனால் ரிஷப் பண்டை நீக்கிவிட்டு, தோனி போல் எந்த நெருக்கடியும் இன்றி கூலாக விளையாடிய சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதே போன்று காயத்திலிருந்து திரும்பிய தீபக் ஹூடா, ஆசிய கோப்பை தொடரில் ஒரு ஓவரை கூட வீசவில்லை. அவரை விட சஞ்சு சாம்சன் நல்ல பேட்ஸ்மேன் என்பதால், அவருக்கு இடம் வழங்குவதே சரியாக இருக்கும் என்று விமர்சகர்களும் கூறி வருகின்றனர்.

Story first published: Friday, October 7, 2022, 17:01 [IST]
Other articles published on Oct 7, 2022
English summary
Fans raised voice for Sanju Samson to be included in icc t20 world cup இவரையா டி20 உலககோப்பையில் சேர்க்கல.. சஞ்சு சாம்சனுக்காக களமிறங்கும் ரசிகர்கள்.. யாருக்கு பதில் ?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X