Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னங்க நடக்குது? ஜாண்டி ரோட்ஸ்-ஐ விட இவர் பெருசா? பயிற்சியாளர் தேர்வை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் பதவி ஜாண்டி ரோட்ஸ்-க்கு கிடைக்காது என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர்கள் நியமனம் படிப்படியாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரி மீண்டும் நியமிக்கப்பட்டார்.

அப்போதே சலசலப்பு எழுந்தது. டாம் மூடி, மைக் ஹெஸ்ஸன் உள்ளிட்டவர்களை விட ரவி சாஸ்திரி எப்படி தகுதியானவர்? என சிலர் கேள்வி எழுப்பினர்.

அதிர்ச்சி செய்தி

அதிர்ச்சி செய்தி

ஆனால், இப்போது அதை விட அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. தான் கிரிக்கெட் ஆடிய காலத்தில் ஜாண்டி ரோட்ஸ் தலைசிறந்த பீல்டராக இருந்தார். இன்றைய சிறந்த பீல்டர்கள் பலருக்கும் முன்னுதாரணம் ஜாண்டி ரோட்ஸ் தான். அவருக்கே இந்திய அணியில் பீல்டிங் பயிற்சியாளர் பதவி மறுக்கப்பட்டுள்ளது.

மூன்று பயிற்சியாளர்கள்

மூன்று பயிற்சியாளர்கள்

ஜாண்டி ரோட்ஸ், அபய் சர்மா மற்றும் தற்போதைய இந்திய அணி பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் என மூவர் இறுதிக் கட்ட தேர்வுக்கு தேர்வாகி இருந்தனர். இவர்களில் மூவரையும் நேர்முகத் தேர்வு செய்தது எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான தேர்வுக் குழு.

ஜாண்டி ரோட்ஸ் தான் டாப்

ஜாண்டி ரோட்ஸ் தான் டாப்

இவர்களில் ஜாண்டி ரோட்ஸ் தான் உச்சகட்ட தேர்வு என்பது அனைவரும் ஓப்புக் கொள்ளும் விஷயம். அவர் கடந்த வருடங்களில் பல்வேறு தேசிய அணிகளுக்கு பீல்டிங் பயற்சி அளித்து இருக்கிறார். அதன் பலன்களையும் அந்த அணிகள் கண்டுள்ளன.

ஸ்ரீதருக்கு தான் வாய்ப்பு

ஸ்ரீதருக்கு தான் வாய்ப்பு

ஆனால், தற்போதைய பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதருக்கு தான் மீண்டும் பயிற்சியாளர் பதவி கிடைக்கும் என கூறப்படுகிறது. அவர் இந்திய வீரர்களை பற்றி நன்கு அறிந்து வைத்துள்ளார். அவர்கள் நிறை, குறைகளை தெரிந்து வைத்துள்ளார் என காரணம் கூறப்படுகிறது.

அதிர்ச்சியில் ரசிகர்கள்

அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஆனால், இதைக் கேட்டு இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள். தலைசிறந்த ஜாண்டி ரோட்ஸ்-க்கே பீல்டிங் பயிற்சியாளர் பதவி இல்லை என்றால் எதற்காக தேர்வு நடத்துகிறீர்கள் என பொங்கி வருகிறார்கள். யார் என்ன சொன்னாலும், இந்திய அணியில் நடப்பது தான் நடக்கும் போல!

Story first published: Thursday, August 22, 2019, 10:00 [IST]
Other articles published on Aug 22, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+