Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காத்தோடு காத்தானேன்... கண்ணே உன் மூச்சானேன்... ஹர்திக் -நடாஷாவின் ஸ்பெஷல் பிக்சர்

மும்பை : இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிக்கின் காதல் கதை சமூகவலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடும் விஷயமாக உள்ளது.

ஹர்திக் புகைப்படம் போடுவதும் அதை ரசிகர்கள் அதிகளவில் லைக்குகள் மற்றும் கமெண்ட்டுகளால் அலங்கரிப்பதுமாக போகிறது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவரது சமீபத்திய புகைப்படமும் பகிரப்பட்ட ஒரு மணிநேரத்திற்குள்ளாகவே 70 லட்சம் லைக்குகளை அள்ளியுள்ளது.

இன்ஸ்டாவில் அறிவித்த ஹர்திக்

இன்ஸ்டாவில் அறிவித்த ஹர்திக்

வரும் செப்டம்பர் மாதத்தில் துவங்கவுள்ள ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் சார்பில் விளையாடவுள்ளார் இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 4 மாதங்களாக வீட்டில் முடங்கியுள்ள பாண்டியா, கடந்த மே மாதம் 31ம் தேதி நடாஷாவின் கர்ப்பம் குறித்து இன்ஸ்டாவில் அறிவித்தார்.

இன்ஸ்டாவில் புகைப்படங்கள்

இன்ஸ்டாவில் புகைப்படங்கள்

கடந்த ஜனவரி 1ம் தேதி தன்னுடைய நிச்சயதார்த்தம் குறித்து அறிவித்த ஹர்திக் பாண்டியா, கொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கியிருந்தாலும், தன்னுடைய குடும்பத்தினரின் பல்வேறு புகைப்படங்கள், தன்னுடைய பிட்னஸ் பயிற்சிகள் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

லைக்குகளை அள்ளும் புகைப்படங்கள்

லைக்குகளை அள்ளும் புகைப்படங்கள்

அதிலும் குறிப்பாக நடாஷாவுடன் ஹர்திக் பாண்டியா இருக்கும் புகைப்படங்களுக்கு இன்ஸ்டாகிராமில் தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டமே காணப்படுகிறது. அத்தனை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் அள்ளுகிறது. சக வீரர்கள், பிரபலங்களும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

போட்டோஷூட் எடுத்த பாண்டியா

போட்டோஷூட் எடுத்த பாண்டியா

இந்நிலையில் ஹர்திக் பாண்டியா, நடாஷாவுடன் இருக்கும் சமீபத்திய புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் அவ்வளவு அழகாக இருக்கிறது. தனிப்பட்ட முறையில் போட்டோஷூட்டாக இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஸ்டைலிஸ்ட்களின் பெயர்களையும் வெளியிட்டுள்ளார் ஹர்திக்.

பிரபலங்கள் கமெண்ட்

பிரபலங்கள் கமெண்ட்

இந்த புகைப்படம் வெளியிடப்பட்ட ஒரு மணிநேரத்திற்கு உள்ளாகவே 70 லட்சம் லைக்குகளை அள்ளியுள்ளது. மேலும் சக வீரர்கள் கேஎல் ராகுல், ஹர்திக்கின் சக வீரரும் சகோதரருமான க்ருணால் பாண்டியா உள்ளிட்டவர்களும் கமெண்ட் செய்துள்ளனர். இதேபோல டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவும் இந்த புகைப்படத்திற்கு சிகப்பு நிற ஹார்ட் எமோஜிகளை கமெண்ட் செய்துள்ளார்.

Story first published: Sunday, July 26, 2020, 13:03 [IST]
Other articles published on Jul 26, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+