Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ரஞ்சிக்கோப்பைக்கு அவமானம்” இந்திய அணியில் இருந்து சூப்பர் ஸ்டார் புறகணிப்பு.. ரசிகர்கள் கொந்தளிப்பு

மும்பை: ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை, பிசிசிஐ அறிவித்ததில் ரஞ்சிக்கோப்பை அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதனை தொடர்ந்து நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடரில் விளையாடவுள்ளது.

வரும் ஜனவரி 21ம் தேதி முதல் நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகின்றன. பிப்ரவரி 17ம் தேதி முதல் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது.

இந்திய அணி அறிவிப்பு

இந்திய அணி அறிவிப்பு

இந்த தொடர்களுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் ரசிகர்கள் யாருமே எதிர்பார்த்திராத சில முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன. இளம் வீரர் பிரித்வி ஷா நியூசிலாந்துடனான டி20 அணியில் கம்பேக் கொடுத்துள்ளார். இதே போல அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட் அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார். கே.எல்.ராகுல் இல்லாததால் அவருக்கு மாற்றாக சூர்யகுமார் சேர்க்கப்பட்டுள்ளார்.

ரஞ்சிக்கோப்பைக்கு இழிவா?

ரஞ்சிக்கோப்பைக்கு இழிவா?

இந்நிலையில் இந்த அணியில் இளம் வீரர் சர்ஃப்ராஸ் கான் அட்டகாசமான ஃபார்மில் இருக்கையில், பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமாருக்கு எப்படி வாய்ப்பு தருவீர்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் இஷான் கிஷானுக்கு வாய்ப்பு தந்துள்ளனர். 25 வயதாகும் சர்ஃப்ராஸ் கான், சமீபத்தில் நடந்த ரஞ்சிக்கோப்பை தொடரில் வெறும் 5 போட்டிகளில் 431 ரன்களை விளாசினார். இதில் 2 சதமும், ஒரு அரைசதமும் அடங்கும். கடந்த சீசனில் 6 போட்டிகளில் 982 ரன்களை விளாசியிருந்தார்.

வல்லுநர்கள் அதிருப்தி

வல்லுநர்கள் அதிருப்தி

இப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் அட்டகாசமான ஃபார்மில் இருக்கும் வீரரை விடுத்து டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடினார் என்பதற்காக சூர்யகுமாருக்கு வாய்ப்பு தந்துள்ளனர். இதனால் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு அடித்தளம் என பெருமை கொண்ட ரஞ்சிக்கோப்பை அசிங்கப்படுத்தப்பட்டுள்ளது. என்னதான் இருந்தாலும் ஐபிஎல், டி20 கிரிக்கெட் தான் பிசிசிஐ-க்கு முக்கியம் என வல்லுநர்கள் விமர்சித்து வருகின்றனர்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்

டெஸ்ட் சாம்பியன்ஷிப்

4 போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டிகளுக்கான அணி மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால் இந்த தொடரில் இந்தியா வெற்றி காண வேண்டும். இத்தொடர் சமனில் முடிவடைந்தால் கூட இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, January 14, 2023, 10:56 [IST]
Other articles published on Jan 14, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+